தமிழ் சினிமாவில் காமெடி நடிகைகளில் ஒருவர் ஆர்த்தி இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 1 கலந்துகொண்ட போட்டியாளர்களில் இவரும் ஒருவர், இந்த நிகழ்ச்சியில் நடிப்பதற்கு முன்பே ஆர்த்தி காமெடியில் சினிமாவில் நடித்து வந்தவர் தான்.
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அவருடைய ரசிகர் வட்டத்தை பெரிது படுத்திக் கொண்டார், கொரோனா ஊரடங்காள் அனைத்து தொழில்களும் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது அதனால் சூட்டிங் எதுவும் நடைபெறவில்லை, படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் இன்னும் ஒரு வருடத்திற்கு தனக்கு ஒரு ரூபாய் சம்பளம் கொடுத்தால் போதும் என அதிரடி ஆபர்ரை அள்ளி வீசினார் ஆர்த்தி.
இவர் இவ்வாறு கூறியது அனைவரிடமும் நல்ல வரவேற்பு பெற்றது அதுமட்டுமில்லாமல் தனக்கு சம்பளம் நியமிக்கப்பட்டிருக்கும் தொகையில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு படத்தில் வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கண்டிஷன போட்டார், இந்த நிலையில் சமீபத்தில் பலரும் பேஸ் ஆப் செயலி மூலம் ஆண்களை பெண் போலவும், பெண்களை ஆண் போலவும் சித்தரித்து புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் ஆர்த்தியும் அதேபோல் இவர் தான் என்னுடைய காதலர், இவர் தான் நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன், கணவர் கணேசனிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் புகைப்படத்தையும் இதில் பதிவேற்றியுள்ளார் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் ரசித்து வருகிறார்கள்.
My new lover my cute my darling I'm going to marry him…. Sorry @km_ganeshkar pic.twitter.com/gvHIfoSnwD
— Actress Harathi (@harathi_hahaha) June 21, 2020