நடிப்பதில் களம் இறங்கிய ஏ ஆர் ரகுமான்.! யாருடைய படத்தில் தெரியுமா.?

வெள்ளித்திரையில் பல ஹிட்டடித்த திரைப்படங்களில் இசையமைத்தவர் தான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இவர் ரோஜா திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்பு பல திரைப்படங்களில் இசை அமைத்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.

மேலும் இவர் கடந்த2019ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் பிகில் இந்த திரைப்படத்தில் இடம்பெறும் சிங்கப் பெண்ணே என்ற பாடலில் ஒரு சில நிமிடமே ஏ.ஆர் ரகுமான் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஏ.ஆர்.ரகுமான் தற்போதும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறாராம் ஆம் மோகன்லால் நடிப்பில் உருவாகும் ஆராட்டு என்ற மலையாள படத்தில் நடிக்கிறாராம் மேலும் இந்த திரைப்படத்தை உன்னிகிருஷ்ணன் இயக்கி வருகிறாராம்.

இவர் இந்த திரைப்படத்தில் நடிக்கிறார் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த படத்தின் பாடல் காட்சியில் நடிக்கும்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சில ரசிகர்கள் எப்பொழுது ஏ.ஆர்.ரகுமான் கதாநாயகனாக நடிப்பார் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ar raguman

Leave a Comment

Exit mobile version