ஆத்தாடி இத்தனை கசமுசா காட்சியா.! அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் நடிக்க மறுத்த அஜித் பட நடிகை.

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவார கொண்டா.  இவர் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் அர்ஜுன் ரெட்டி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது தெலுங்கு ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது இந்த திரைப்படம்.

 மேலும் அர்ஜுன் ரெட்டி திரைப்படம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் இதனை தமிழில் ரீமேக் செய்ய முடிவெடுத்தார்கள் தமிழில் அர்ஜுன் ரெட்டி ரீமிக்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்து இருந்தார் அதேபோல் படத்தை விக்ரமின் ஆஸ்தான இயக்குனர் பாலா தான் இயக்கினார்

பாலா இந்த திரைப்படத்திற்கு வர்மா என டைட்டில் வைத்திருந்தார் அதேபோல் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது அதனைத் தொடர்ந்து படத்தை 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிட இருந்தார்கள். ஆனால் படத்தின் இறுதியில் ஒரு சில காட்சிகள் சரியாக வராததால் திருப்திகரமான இல்லை அதனால் அந்தப் படத்திலிருந்து அந்த காட்சிகளை திருத்துவதற்கு பாலா மறுத்துவிட்டார் அதனால் இந்த திரைப்படம் வெளியாகாமல் முடக்கப்பட்டது.

அதன்பிறகு இந்த திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளை மாற்றி அமைத்து ஆதித்யா வர்மா என்ற பெயரில் கிரீசாய என்ற அறிமுக இயக்குனர் இயக்கி வெளியிட்டார். அதேபோல் இந்தத் திரைப்படம் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் கவர்ச்சி மற்றும் முத்த காட்சிகளுக்கு பஞ்சமே இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்திலிருந்து நடிக்க மறுத்த காரணத்தை பிரபல நடிகை பார்வதி நாயர் கூறியுள்ளார் இவர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய் அவர்களுக்கு மனைவியாக நடித்தார். அதன்பிறகு இவர் உத்தமவில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, வெள்ள ராஜா போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவர் இன்ஸ்டகிரம் லைவ் வில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பல முறை பதில் அளித்துள்ளார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் நீங்கள் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் நெருக்கமான காட்சிகள் அதிகமாக இருப்பதால் தான் நடிக்க மறுத்து விட்டீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.அதற்கு பார்வதி நாயர் ஆம் உண்மைதான் என கூறி அழகான திரைப்படத்தை மிஸ் செய்து விட்டேன் என்று பதிலளித்து விட்டார்.

Leave a Comment