அர்ஜுன் தவறவிட்ட 4 சூப்பர் ஹிட் படங்கள்.! இதுல நடிச்சிருந்தா அவர் ரேஞ்சே வேற.. மிஸ் பண்ணிட்டாரே..

நடிகர் அர்ஜுன் இளம் வயதிலேயே சினிமா உலகில் தலை காட்ட தொடங்கிவிட்டார் ஆரம்பத்தில் சிறப்பான படங்களில் நடித்ததால் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். குறிப்பாக தேசப்பற்று உள்ள படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தையும் சினிமா உலகில் பிடித்தார்.

தொடர்ந்து வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவருக்கு ஒரு கட்டத்தில் வயசு அதிகமானதால் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை இழந்தார் தற்பொழுது டாப் ஹீரோக்களுக்கு வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் அஜித்துடன் மங்காத்தா, விஷாலுடன் இரும்புத்திரை , சிவகார்த்திகேயனுடன் ஹீரோ போன்ற படங்களில் நடித்தார்.

இப்பொழுது கூட  வில்லனாக இவரை ஒப்பந்தம் செய்ய பல இயக்குனர்கள் போட்டி போட்டுள்ளனர். அர்ஜுனோ சில காரணங்களால் அந்த பட வாய்ப்பை கைவிட்டு உள்ளார் இந்த நிலையில் நான்கு சூப்பர் ஹிட் படங்களை அர்ஜுன் மிஸ் செய்து உள்ளார் அது என்னென்ன என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம். 1. கோ : படத்தில் நடிகர் அர்ஜூனை பிரகாஷ்ராஜ் நடித்த அரசியல்வாதி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க  படக்குழு கூப்பிட்டது ஆனால் அப்பொழுது வேறு ஒரு படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்ததால் கோ படத்தில் கமிட் ஆக முடியாமல் போனதாம்.

2. இந்தியன் : பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான இந்தியன் படத்தில் நடிக்க வைக்க ஷங்கர் முயற்சி செய்து உள்ளார் ஆனால் அர்ஜுன் கதையை கேட்டுவிட்டு மறுத்துவிட்டாராம் காரணம் என்னவென்று பார்த்தால் ஏற்கனவே ஜென்டில்மேன் படத்தில் அர்ஜுன் ஊழலை எதிர்க்கும் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தியன் படத்தில் ஊழல்வாதியாக நடிக்க சொன்னதால் அவர் கதையை  விரும்பாமல் படத்தை விட்டு வெளியேறினாராம்.

3. மாநாடு : வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவானது திரைப்படம் மாநாடு. இந்த படம் முழுக்க முழுக்க டைம் லூப்பை அடிப்படையாகக் கொண்டு வந்திருந்தது. படம் புதுவிதமாக இருந்ததால் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். இந்த படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு முதலில் அர்ஜுனுக்கு வந்துள்ளது ஆனால் கதை பிடிக்கவில்லை எனக் கூறி நிராகரித்து விட்டாராம்.

4. மாஸ்டர் : லோகேஷ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரமான பவானி கதாபாத்திரத்தை முதலில் ஆக்சன் கிங் கிடம் தான் சொல்லப்பட்டது. சீனியர் நடிகரான அர்ஜுன் விஜயிடம் அடிவாங்குவது இது தன்னுடைய இமேஜ்க்கு சரி வராது என கூறி மறுத்துவிட்டாராம்.

Leave a Comment

Exit mobile version