அஜித் கூட்டணியில் மீண்டும் அர்ஜுன்.! பரபரப்பை ஏற்படுத்தும் புதிய கூட்டணி…

0
ajith-arjun
ajith-arjun

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்குபவர் நடிகர் அஜித்குமார் இவர் தற்போது எச் வினோத் இயக்கும் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனைத் தொடர்ந்து வலிமை திரைப்படத்தின் படபிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது அது மட்டுமல்லாமல் டப்பிங் பணிகள் மற்றும் பாடல் காட்சி ஆகியவற்றில் படகுழு பிசியாக இருந்து வருகிறது.

பொங்கலை முன்னிட்டு வெளியாகும் துணிவு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என ஏற்கனவே பட குழு தெரிவித்து வருகிறது. அதனை தொடர்ந்து விஜயின் வாரிசு திரைப்படமும் அதே தினத்தில் வெளியாவதால் விஜய்,அஜித் ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் வேட்டே இருக்கிறது. இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்க உள்ள ஏ கே 62 திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

இவருடைய அந்த கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மங்காத்தா திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு அஜித்தை சந்தித்துள்ளதாகவும் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் அதே சமயத்தில் நடிகர் அர்ஜுனையும் சந்தித்திருக்கிறார் வெங்கட் பிரபு இதனால் அஜித்தின் புதிய படத்தில் அர்ஜுன் நடிக்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால் விக்னேஷ் சிவன் இயக்கும் அடுத்த படத்திலா இல்லை மங்காத்தா இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்களா என்று  தெரியவில்லை. விரைவில் இவர்களுடைய கூட்டணியில் உருவாகும் படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.