அரியலூர் இளம்பெண்ணுக்கு கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட குடும்பம்.! மக்கள் அதிர்ச்சி.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது, இந்த வைரஸ் உலக நாடுகளையே நடுநடுங்க வைத்துள்ளது, இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர உலக நாடுகள் அனைத்தும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது, இந்த நிலையில் வெளிநாடுகளிலிருந்து அரியலூர் மாவட்டத்திற்கு வந்த 32 பேர் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்கள், மேலும் சென்னையில் இருந்து வந்த  ஒருவருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டு இருப்பது அரியலூர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஓட்டுனருக்கு ஒரு மகளும் மகனும் இருக்கிறார்கள் இவர் கோவையில் உள்ள தனியார் மாலில் பணியாற்றி வந்துள்ளார், பின்பு சென்னையில் வேளச்சேரியில் உள்ள மாலில் பணிபுரிந்துள்ளார், அவருக்கு கடந்த சில நாட்களாக தொண்டை வலி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதோடு உடல் நிலை மோசமான நிலை காணப்பட்டதால் அந்தப் பெண் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அவரை அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தார்கள் இந்த நிலையில் அவரின் குழந்தை, தந்தை, தாய் தம்பி, அண்ணன் என அவர்களின் குடும்பத்தை சேர்ந்த 14 பேரை தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்து வந்தனர்.

அரியலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார், இது அரியலூர் மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் அந்தப் பெண் தங்கியிருந்த வீட்டை தாண்டி செல்வதற்கே மக்கள் பயப்படுகிறார்கள். அதனால் அந்த தெரு முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மக்களின் பயத்தை போக்கி வருகிறார்கள்.

மேலும் அரியலூர் மாவட்டத்தில் வேலை பார்க்க வெளிநாட்டுக்கு சென்று தற்பொழுது வீட்டிற்கு வந்துள்ள 278 பேரில் 32 பேர் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்கள் இதனை சுகாதார துறை அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள்.

Leave a Comment