அரியலூர் மாவட்டம் செந்துறையில் ஒருவருக்கு கொரோனா.! சிகிச்சைக்காக திருச்சிக்கு மாற்றம்.!

டெல்லி மாநாட்டில் பல இஸ்லாமியர்கள் கலந்து கொண்டார்கள் அவர்களில் அரியலூரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள் இவர் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியை சேர்ந்த 3 பேர் அரியலூர் சிமெண்ட் ஆலை ஊழியர் ஒருவர் திருமானூர் பகுதியை சேர்ந்த ஒருவர் என ஐந்து பேரும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டார்கள் அவர்கள் அனைவரையும் சுகாதாரத்துறை கடந்த வாரம் அழைத்து அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொண்டு வந்தார் அப்பொழுது ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இந்த நிலையில் செந்துறை போலீஸார் 3 இஸ்லாமியர்கள் வசித்த வீடுகளை சுற்றி 200 மீட்டர் தொலைவிற்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்லாமல் அப்பகுதியில் இருந்து யாரோ வெளியே செல்ல மூலம் தடை ஏற்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கொரோனா உறுதி செய்யப்பட்ட இஸ்லாமியர்கள் குடும்ப உறுப்பினர்களை சுகாதாரத்துறை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு கொரோனா இருக்கிறதா என்பதை பரிசோதித்துக் செய்து வருகிறார்கள். இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment