கொரோனாவின் கோர தாண்டவத்தில் சிக்கியது அரியலூர் மாவட்டம்.! எத்தனை பேருக்கு தெரியுமா.?

உலக நாடுகளையே நடுநடுங்க வைத்து வருகிறது இந்த கொரோனா வைரஸ் இந்த வைரஸின் கோரப்பிடியில் தற்போது இந்தியாவும் சிக்கியுள்ளது, இந்த கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கப்பட்டு வருகிறது அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கிறார்கள்.

அப்படியிருந்தும் கொரோனா வைரஸ் மிக வேகமாக இந்தியாவில் பரவி வருகிறது, தமிழ்நாட்டில் படிப்படியாக பரவி வந்த கொரோனா தற்பொழுது ஒரேடியாக உயர்ந்து வருகிறது இதனால் தமிழக மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள், கொரோனா எண்ணிக்கை சில நாட்களாக மிக வேகமாக அதிகரித்து வருகிறது, தமிழகத்தில் மட்டும் இதுவரை சுமார் 3000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதேபோல் சென்னையில் 1400 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர்,.

சென்னையில் அதிவேகமாக பரவி வரும் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது சென்னை மாநகராட்சி, இந்த நிலையில் சென்னையில் கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்துவரும் தொழிலாளர்களுக்கு வைரஸ் தொற்று பரவலாகக் கண்டறியப்பட்டுள்ளது இது அங்கு காய்கறி வாங்கப் போனவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,

அதேபோல் கோயம்பேடு சந்தையில் வேலை செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிய பல பேருக்கு வைரஸ் தொட்டு கண்டறியப்பட்டுள்ளது, கோயம்பேடு சந்தையில் இருந்து வேலை செய்துவிட்டு சொந்த ஊரான அரியலூர் ஊருக்கு திரும்பிய 20 பேருக்கு தற்போது கொரோனா  உறுதியாகியுள்ளது, இதனைத்தொடர்ந்து கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட காவனூர், பஉள்ளியங்குடி, கொலையனுர், சிறுகளத்தூர், கடுகூர், பெரியாக்குறிச்சி போன்ற பகுதிகளுக்கு சென்ற 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் நாலு பேர் என புதிதாக 24 பேருக்கு அரியலூரில் தற்பொழுது கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் கோயம்பேட்டிலிருந்து அரியலூர் மாவட்டத்திற்கு சென்றவர்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது அதுமட்டுமில்லாமல் காவலர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை கொரோநாவல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Comment

Exit mobile version