அரியலூர் மாவட்டத்திற்கு அதிர்ச்சி செய்தி.! சென்னையிலிருந்து வந்த 20 பேருக்கு கொரோனா உறுதி.!

0
ariyalur corona-tamil360newz
ariyalur corona-tamil360newz

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதனை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அதேபோல் தமிழ்நாட்டிலும் 144 தடை விதிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது,

இந்த நிலையில் தமிழ்நாட்டில் சென்னையில் அதிக அளவாக 1082 பேருக்கும் கொரோனா பதிப்பு இருக்கிறது இதனைத் தொடர்ந்து கோவை 141 பேருக்கும் செங்கல்பட்டில் 86 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருக்கிறது இதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து அரியலூர் வந்த சரக்கு வாகனத்தின் மூலம் கோயம்பேட்டில் வேலை செய்த தொழிலாளர்கள் வந்துள்ளார்கள். அவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் இரு சிறுவர்கள் உட்பட 20 பேருக்கு கொரோனா  இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கோயம்பேட்டில் இருந்து அரியலூருக்கு வந்த 40 பேருக்கு மேல் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணித்து வருகிறார்கள் இந்த நிலையில் அரியலூர் இதுவரை 8 பேருக்கு கொரோனா இருந்தது அதனால் ஆரஞ்சு மண்டலமாக அரியலூர் மாவட்டம் இருந்தது, இந்த நிலையில் தற்போது சிவப்பு மண்டலமாக மாறுகிறது ஏனென்றால் அரியலூரில் மொத்தம் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.