கொரோனாவில் இருந்து முழுமையாக விடுபட்ட மாவட்டம்.! இவுங்க மாவட்டம் மட்டும் என்ன பண்ணினாங்க.?

கொரோனா என்ற வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது இதில் இருந்து விடுபட பலநாடுகள் பலவித முயற்சிகளை செய்து வருகிறார்கள், அதே போல் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்தது.

இதனை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வந்தார்கள், ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா வேகமாக பரவி வந்தது அதேபோல் தமிழ்நாட்டிலும் மிக வேகமாக பரவி வந்தது.

144 தடை விதிக்கப்பட்டதால் தினக்கூலி செய்யும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப் பட்டார்கள், அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் அவஸ்தைப் பட்டு வருகிறார்கள், இந்த நிலையில் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில் அரியலூரிலும் இந்த வைரஸ் இரண்டு பேருக்கு இருந்தது.

சென்னையிலிருந்து வந்த அரியலூரை சேர்ந்த பெண்ணுக்கும், மேலும் செந்துறை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது, இந்த நிலையில் அரியலூர் பெண் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மேலும் செந்துறை சேர்ந்தவர் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இந்த நிலையில் இருவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அரியலூரை சேர்ந்த பெண்ணிற்கு பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்துள்ளார்கள், இவர் கொரோனாவுடன் டிக் டாக் செய்தது மிகப்பெரிய வைரலானது அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் கொரோனாவில் இருந்து முழுமையாக விடுபட்டுள்ளது.

Leave a Comment