‘அறிந்தும் அறியாமலும்’ படத்தில் நடித்த நவ்தீப் வெளியிட்ட மிரட்டலான சிக்ஸ்பேக் புகைப்படம்.! ரசிகர்கள் ஷாக்

0
arinthum ariyamalum
arinthum ariyamalum

தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் நடிகர் நவ்தீப், இவர் தமிழில் ஜெயராம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதன் பிறகு ஆர்யா நடித்த அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தில் பிரபலமடைந்தார், அதன்பிறகு தமிழில் இளவட்டம், நெஞ்சில் ஜில் ஜில் அஜித்துடன் ஏகன் ஆகிய திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தெலுங்கில் இவர் நடித்த ஆர்யா 2 திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது, இவர் நடிப்பில் வீரமாதேவி,சீரு, AA19 ஆகிய திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன, அதேபோல் இவர் தெலுங்கில் பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் சாக்லேட் பாயாக இருந்த இவர் சிக்ஸ்பேக் வைத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகரிடம் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அறிந்தும் அறியாமலும் படத்தில் நடித்த நவ்தீப் இப்படி மாறி விட்டாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

arinthum ariyamalum
arinthum ariyamalum