துணிவு படத்தை பார்க்கப் போறீங்களா.. அப்போ ஹச். வினோத் சொல்வதைக் கேளுங்கள்

0
thunivu-
thunivu-

நடிகர் அஜித் குமார் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துக்கொண்டு சினிமா உலகில் வெற்றிகரமாக ஓடுகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல்  அள்ளி புதிய சாதனை படைத்தது அதனை தொடர்ந்து தனது 61வது திரைப்படமான துணிவு படத்தில் வெற்றிகரமாக நடித்த முடித்துள்ளார்.

இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரகனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய், ஜான் கொக்கன் மற்றும் பல நட்சத்திர நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர். துணிவு படம் முழுக்க முழுக்க ஒரு பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது

இந்த படம் பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆக இருக்கிறது. அதே தேதியில் துணிவு படத்தை எதிர்த்து வாரிசு திரைப்படம் ரிலீசாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே ரசிகர்களை கவர்ந்திழுக்க சைலண்டாக அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது.

ஏன் அண்மையில் கூட துணிவு திரைப்படத்திலிருந்து அஜித்தின் ஸ்டில் ஒவ்வொன்றும் வெளிவந்து ரசிகர்களை துள்ளலாட்டம் போட வைத்தது அதனைத் தொடர்ந்து சில்லாசில்லா  பாடல் வெளிவர உள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு படத்தின் இயக்குனர் ஹச் வினோத் பேட்டியில் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார் அதில் அவர் சொன்னது..

துணிவு படத்தின் கேரக்டரை பற்றி கேட்காதீர்கள் அதை சஸ்பென்சாகவே இருக்கட்டும், வில்லனாக நடிக்கிறார் என்றால் மங்காத்தாவா என்று கேட்பீர்கள் இப்படி பல கற்பனைகள் உருவாகும் முதலில் படம் பார்க்க வரும் ரசிகர்கள் துணிவு படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை பார்த்து விட்டு வாங்க இந்த படத்திற்கு வங்கி செட் தேவைப்பட்டது அதனால் அதை போட்டும் வங்கிக் கொள்ளையா என்று கேட்டால் அதற்கும் இப்பொழுது என்னிடம் பதில் இல்லை என கூறி உள்ளார்.