மறுபடியும் ஒன்று சேர போறாங்களா.. தனுஷ் ரசிகர்களுக்கு வந்த நல்ல செய்தி

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக ஜொலிப்பவர் நடிகர் தனுஷ். இவர் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் தனுஷ் கடைசியாக நடித்த திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ததை தொடர்ந்து தனுஷ் தற்பொழுது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

திரை உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர் தனுஷ் நிஜ வாழ்க்கையில் மட்டும் தற்போது சரிவை சந்தித்துள்ளார். தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் லிங்கா, யாத்ரா என இரு மகன்கள் இருக்கின்றனர். இப்படி வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வந்த..

இந்த ஜோடி திடீரென சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்தது அதன் பிறகு வரும் தனக்கென ஒரு பாதையை வகுத்துக் கொண்டு ஓடுகின்றனர்  ஐஸ்வர்யா ரஜினி  லால் சலாம் எனும் திரைப்படத்தை எடுத்து வருகிறார் அவ்வபோது ஆல்பங்களையும் தயாரிப்பது வழக்கம்.. மறுபக்கம் நடிகர் தனுஷ் வாத்தி படத்தின்  வெற்றியை தொடர்ந்து கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து யாருடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது அதாவது வெற்றி இயக்குனர்  மாரி செல்வராஜுடன் தனுஷ் கைகோர் கை இருக்கிறார் என பேச்சுக்கள் உலாவுகின்றன. ஏற்கனவே மாரி செல்வராஜ், தனுஷ் கைகோர்த்த கர்ணன் திரைப்படம்..

பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதை தொடர்ந்து மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை எடுத்து முடித்துள்ளார் அதனை தொடர்ந்து “வாழை” என்னும் திரைப்படத்தை எடுத்து வருகிறார் அடுத்து துருவ் விக்ரமை வைத்து ஒரு படம் பண்ண உள்ளார். அப்புறம் தான் மாரி செல்வராஜூம், தனுஷம் இணைவார்கள் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Leave a Comment