நீண்ட வருடத்திற்கு பிறகு இணைந்து படம் எடுக்கும் வெற்றிமாறன்-கதிரேசன்.? இந்த படத்தில் கதாநாயகனாக இந்த நடிகரா.!

தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம் தான் ஆடுகளம் இப்படம் மிகவும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் திரையரங்குகளில் ஹிட்டடித்தது.

இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் வெற்றிமாறன் படத்தை தயாரித்தவர் கதிரேசன், இந்த படம் மக்களிடையே இருவருக்கும் மிகவும் பெயர் வாங்கித் தந்தது. வெற்றிமாறன் தமிழில் வெளியான பொல்லாதவன் என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன்.

ஏற்கனவே வெற்றிமாறன் கதிரேசனும் இணைந்து வெற்றிமாறனின் தயாரிப்பு நிறுவனமான கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் காக்கா முட்டை, வட சென்னை, உதயம், விசாரணை போன்ற படங்களை தயாரித்து ரசிகர்களுக்கு வெளியிட்டிருந்தனர்.

இதனை அடுத்து பல ஆண்டுகளாக வெற்றிமாறனும் கதிறேசனும் இணைந்து ஒரு படம் எடுக்காத நிலையில்.

தற்போது வெற்றிமாறனும் கதிரேசனும் இணைந்து ஒரு புதிய படம் ஒன்றை தயாரிக்க போகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி வந்திருக்கிறது.

இவர்கள் தயாரிக்கும் இப்படத்திற்கு கதாநாயகனாக நடிகர் சசிகுமார் நடிக்கப் போகிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் பல வருடங்களுக்கு பிறகு இரண்டு பேரும் இணைகிறார்களா இனிமேல் படம் வேற லெவல் இருக்கும் என்று ரசிகர்கள் சந்தோஷத்தில் கூறிவருகிறார்கள்.

saci
saci
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment