ரஜினியின் 169 – வது படத்தில் தலைவருக்கு ஜோடி இவங்களா.? நயன், காஜல் இல்லையா.? வருத்தப்படும் தமிழ் ரசிகர்கள்.

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவாவுடன் இணைந்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் கிராமத்து சாயலில் இருக்குமென தெரியவருகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடனடியாக அமெரிக்கா சென்று தனது உடலை பரிசோதித்து தற்போது சென்னை திரும்பியுள்ளார்.

ரஜினிகாந்த் திரும்பிய உடன் அடுத்ததாக யாருடன் இணைவார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்த நிலையில் இளம் இயக்குனரான தேசிங்கு பெரியசாமி உடன் அவர் இணைந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவருகின்றன.

இயக்குனர் தேசிங்கு பெரிய சாமியும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு நடிகர் நடிகைகளையும் தேர்வு செய்து வருகிறார் அந்த வகையில் ரஜினியுடன் ஏற்கனவே நடித்த நடிகையான தீபிகா படுகோனே இந்த திரைப் படத்திலும் நடிக்க வைக்க உள்ளதாக தகவல்கள் கசிகின்றன.

இவர் ஏற்கனவே ரஜினியுடன் இணைந்து கோச்சடையான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது பல வருடங்கள் கழித்து மீண்டும் ரஜினியுடன் ஜோடி சேர்வதால் படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது திறமையான நடிகைகள் பலரும் இருந்தாலும் இளம் இயக்குனரான தேசிங்கு பெரியசாமி அவர்களை எல்லாம் கிழட்டிவிட்டு தற்போது இந்தி நடிகையான தீபிகா படுகோனே அழைத்தது  தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பலருக்கும் அதிர்ச்சி கொடுத்து உள்ளது எது எப்படியோ படம் வெற்றி அடைந்தால் போதும் என ஒரு தரப்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.