நடிகர் விஜய்சேதுபதி ஹீரோவாக நடிப்பதற்கு முன்பாக குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படங்கள் மட்டுமே இத்தனையா.? வியந்த ரசிகர்கள்.

சினிமா உலகில் பலர் தனது திறமையை வெளகாட்டி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இழுக்க அதிக முயற்சி செய்து படங்களில் நடிக்க கடினமாக உழைக்கின்றனர். ஆனால் ஒருசில  நடிகர்களோ வறுமையின் காரணமாகவும் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தவர் களும் இருக்கின்றன அந்த வகையில்  இதற்கு விஜய் சேதுபதி சினிமாவில் முதலில் சம்பாதிக்கத்தான் வந்தார்.

சினிமா உலகில் கிடைக்கின்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் பின் படிப்படியாக தனது திறமையின் மீது நம்பிக்கை அதிகம் வைத்து தொடர்ந்து படங்களில் வில்லனுக்கு அடியாளாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தலை காட்டினார் பின் ஒரு கட்டத்தில் இவர் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக நடித்தார்.

முதல் படமே நல்லதொரு வெற்றி பெற்றதை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தன. பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்,இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா,  சூது கவ்வும், நானும் ரவுடிதான், சேதுபதி போன்ற படங்களில் ஹீரோவாக தொடர்ந்து நடித்து  வெற்றியை சம்பாதித்தாலும் ஒரு கட்டத்தில் டாப் ஹீரோ படங்களில் வில்லனாகவும் நடித்து அசத்தினார்.

இதனால் விஜய் சேதுபதியின் மார்க்கெட் விண்ணைத் தொட்டது மேலும் சம்பளத்தையும் பல மடங்கு உயர்த்தி தற்போது நடித்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் ஹீரோவாக ஆவதற்கு முன்பாக நடிகர் விஜய் சேதுபதி நடித்த திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அந்த வகையில் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி,  புதுப்பேட்டை, பெண் (சீரியல் ),  லீ, வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, பலே பாண்டியா பல்வேறு படங்களில் ஹீரோ அவதற்கு முன்பாக விஜய் சேதுபதி இத்தனைப் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Comment