வடிவேலு நடிக்கும் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” படத்தில் இத்தனை ஹாலிவுட் நடிகைகளா.? தலைவர் இப்ப எங்க இருக்காரு தெரியுமா.?

வைகைப்புயல் வடிவேலு தமிழ் சினிமாவில் காமெடியனாகவும்,  ஹீரோவாகவும் வலம் வருகிறார். இதனால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக அவர் விஸ்வரூபம் எடுத்துள்ளார். இருப்பினும்  சில பிரச்சனைகளை இடையில் சந்தித்தால் நான்கு வருடம் கழித்து தான் வடிவேலு தமிழ் சினிமாவில் நடிக்க வந்துள்ளார்.

முதலாவதாக லைகா நிறுவனம் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை அண்மையில்தான் போடப்பட்டது அதனைத் தொடர்ந்து குறைந்த நாட்களிலேயே இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி மக்கள் மத்தியில் படத்துக்கு எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு படம் வருவதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் உச்சத்தில் இருக்கிறது. மேலும் வேற லெவல் எடுக்க படக்குழு  அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்ப கூட நாய் சேகர் ரிட்டன்ஸ் படக்குழு திடீரென லண்டன் புறப்பட்டது. நாம் கூட பாடல்தான் எடுக்கப் போறாங்கன்னு நினைச்சா ஆனா விஷயமே வேற.

அதாவது சுபாஷ்கரன் இயக்குனர் சுராஜ் மற்றும் வடிவேலுவை கிறிஸ்மஸ் கொண்டாட தான் அங்கு அழைத்து உள்ளாராம். ஆனால் படக்குழு அங்கேயும் தனது வேலையை ஆரம்பித்து உள்ளது அதாவது நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திற்காக 8 வெளிநாட்டு நடிகைகள் வேண்டும் என கேட்டு இருந்த நிலையில் தற்போது இங்கு வந்து அந்த நடிகைகளை செலக்ட் செய்துவிட்டு போக இருப்பதாக கூறப்படுகிறது.

vadivelu
vadivelu

வந்து கிறிஸ்மஸ் கொண்டாடுவது தான் வந்த இடத்தில் நடிகைகளை தூக்கியதும் ஆச்சி கிறிஸ்மஸ் கொண்டாடியதும் ஆச்சி. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்து தற்பொழுது அசத்தி உள்ளது. நாய் சேகர் ரிட்டன்ஸ் படக்குழு

Leave a Comment