ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் மட்டும் இத்தனை படங்கள் வெளிவரயுள்ளதா.? கொண்டாட காத்திருக்கும் ரசிகர்கள்.

அண்மைகாலமாக டாப் ஹீரோக்களின் படங்கள் வெளிவந்து வெற்றியை ருசிக்கின்றன. அந்த வகையில் அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து அண்மையில் வெளியாகி வெற்றியை பெற்று வரும் திரைப்படம் விக்ரம்.

நான்கு வருடங்கள் கழித்து கமல் இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளதால் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படமும் சிறப்பாக இருப்பதால் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை மட்டுமே 260 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்துள்ளது விக்ரம் திரைப்படம் வருகின்றன.

நாட்களிலும் நல்லதொரு வசூலை அள்ளி புதிய உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த திரைப்படத்தை தொடர்ந்து ரசிகர்கள் பெரிய அளவிலான டாப் ஹீரோக்களின் படங்களை எதிர்பார்த்து இருக்கின்றனர். அந்த வகையில் ஆகஸ்ட், செப்டம்பரில் மட்டும் பல்வேறு டாப் ஹீரோ திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றன அது குறித்து விலாவாரியாக தற்போது பார்ப்போம்.

அந்த வகையில் முதலாவதாக ஜூலை 18-ஆம் தேதி தனது திருச்சிற்றம்பலம் படம் ரிலீசாக உள்ளது அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 11-ம் தேதி விக்ரமின் கோப்ரா, ஆகஸ்ட் 18-ம் தேதி நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாக இருக்கிறது என தகவல்கள் வெளியாகி உள்ளதே தவிர உறுதி செய்யப்படவில்லை.

இப்படி இருக்க  விருமன், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் ஆகிய இரு திரைப்படங்களும் ஒன்றாக வெளிவரும் என கூறப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தை தொடர்ந்து செப்டம்பர் மாதத்திலும் பல்வேறு டாப் ஹீரோக்களின் படங்கள் வெளிவருகின்றன. செப்டம்பர் 8 – கேப்டன் செப்டம்பர் 15 –  ஜெயம் ரவியின் அகிலன் செப்டம்பர் 30 – மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாக இருக்கிறது.

Leave a Comment