ஆர்ச்சரின் ஆக்ரோஷம் ஸ்மித்தை பதம் பார்த்தது போல் லாபஸ்சாக்னேவின் முகத்தை பதம் பார்த்த பந்து வைரலாகும் வீடியோ

0
labus-jpg
labus-jpg

ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது லண்டனில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது இங்கிலாந்து அணி தான் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 258 ரன்களையும் ஆஸ்திரேலிய அணியை 150 ரன்களை அடித்து இருந்தது, இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்க்ஸ் விளையாடினார்கள் அதில் பெண் ஸ்ட்ரோக் அபாரமான சதத்தால் 5 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது.

267 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 47 புள்ளி மூணு ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் அடித்தது அதனால் மேட்ச் டிராவில் முடிந்தது. இந்த போட்டியின்போது முதல் இன்னிங்சில் வீசப்பட்ட பந்து smith பின்கழுத்தில் அடிபட்டது.

ஆம் முதல் இன்னிங்சில் ஆர்ச்சர் 148 கிலோமீட்டர் வேகத்தில் பந்தை வீசினார் அப்பொழுது ஸ்மித்திற்கு கழுத்துப்பகுதியில் பலமாக அடிபட்டது அதனால் அவர் இரண்டாவது இன்னிங்சில் ஆட முடியவில்லை, அதற்காக லாபஸ்சாக்னே பேட்டிங் செய்தார், இதற்கு முன்னுள்ள போட்டிகளில் போட்டியின்போது வீரர்கள் அடிபட்டால் பீல்டிங்கு மட்டுமே மாற்று வீரர்கள் அனுமதிக்கப்பட்டார் ஆனால் புதிய விதியின்படி தற்பொழுது பேட்டிங்கு மாற்று வீரர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

அந்த வகையில் இரண்டாவது இன்னிங்சில் ஸ்மித்திற்கு பதில் லாபஸ்சாக்னே விளையாடினார், ஆச்சர் ஸ்மித்திற்கு ஒரு பாலை போட்டு பதம் பார்த்தது போல் லாபஸ்சாக்னேக்கும், ஒரு பந்தை வீசியுள்ளார் அப்பொழுது வேகமாக வந்த பந்து லாபஸ்சாக்னே ஹெல்மெட்டில் பலமாகத் தாக்கியது, முகப் பகுதியில் அடிபட்டதால் பிசியோதெரபி அவரை பரிசோதனை செய்தார் அதன் பிறகு எந்த பிரச்சினையும் இல்லை என்பதால் தொடர்ந்து பேட்டிங் செய்ய அனுமதி அளித்தார் இதோ அந்த வீடியோ.