விஜய் டிவி தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு முக்கிய சீரியலில் நடிக்க போகும் அறந்தாங்கி நிஷா.? வெளியான சூப்பர் புகைப்படம் – கூட யார் இருக்காங்க பாருங்க..

சமீபகாலமாக வெள்ளித்திரையில் நடிகர், நடிகர்களையும் தாண்டி சின்னத்திரை நடிகை, நடிகர்கள் அவர்களுக்கு ஈடு இணையாக பயணிக்கின்றனர் அதற்கு காரணம் பெரிதளவு ரசிகர்கள் சின்னத்திரை நிகழ்ச்சி மற்றும் சீரியல்கள் கவர்ந்து இழுத்து உள்ளது. அந்த காரணத்தினால் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் நல்லதொரு பிரபலம் அடைந்து உள்ளதோடு மட்டுமில்லாமல் வெற்றியை பெற்றுள்ளனர்.

மேலும் ஒரு கட்டத்தில் வெள்ளித்திரையிலும் பட வாய்ப்பை கைப்பற்றி வருகின்றனர் அந்த வகையில் அறந்தாங்கி நிஷா விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மனதில் பிரபலமடைந்தார் இப்படி பயணித்துக் கொண்டிருந்த இவர் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 – ல் கலந்துகொண்டு இடம் பிடித்தார்.

வெளியே வந்தவர் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னத்திரையும் தாண்டி வெள்ளித்திரையிலும் பயணித்து வருகிறார் அந்த வகையில் கோலமாவு கோகிலா மற்றும் ஒரு சில படங்களில் தலைகாட்டி நடித்து வருகிறார் அறந்தாங்கி நிஷா.

இப்படி இருக்கின்ற நிலையில் இவரது பேச்சில் எப்போதும் சிறிது காமெடி இருக்கும் அந்த காரணத்தினால் இவரை சீரியலில் இழுத்து போட்டால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அது தற்போது நடந்துள்ளது. சின்னத்திரை சீரியல் பக்கம் தலை காட்ட உள்ளாராம் நிஷா தற்போது பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோடுகளில் நடிக்க இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன

நிஷா அண்மையில் கூட பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்துவரும் ஹேமா என்ற குழந்தையுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும் இவர் கெட்டப் போட்டுக்கிட்டு சீரியலில் நடிப்பது போன்று இருப்பதால் நிச்சயம் பாரதிகண்ணம்மா சீரியல் இவர் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

nisa
nisa

Leave a Comment