சமீபகாலமாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் சீரியல்கள் படங்களைப் போலவே கண்ணியமாக எடுத்து வருகிறார்கள், அதேபோல் சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக சீரியல் இருக்கும் நடிகைகளுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகிவிட்டது. அதேபோல் சீரியலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்கள் மிகவும் பிரபலமானவை.

விஜய் தொலைக்காட்சியில் அரண்மனைக்கிளி சீரியல் ரசிகர்களிடையே பிரபலம், இந்த சீரியலில் வில்லியாக மிரட்டி வருபவர் நீலிமாராணி, நீலிமா ராணி சிறு வயதில் இருந்தே பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

இவர் தேவர்மகன், பாண்டவர்பூமி, ஆல்பம் ,ராஜாதி ராஜா என பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார், திரைப்படங்களை சாப்டான கேரக்டர்களில் நடித்து வந்தாலும் தற்போது அரண்மனைக்கிளி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனாலேயே இவர் நீல கலர் உடையில் புதியதாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
அந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
