சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்கினார் இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது, இதனை உணர்ந்து கொண்ட சுந்தர் சி அவர்கள் மூன்றாவது பாகத்தை எடுக்க தற்போது திட்டமிட்டுள்ளார்.
ஒரு காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் தொடர்ச்சியாக பேய் படங்கள் வெளியாகி வந்திருந்தது இதனை உணர்ந்த சுந்தர் சியும் களத்தில் குதித்து எனக்கும் பேய் படம் எடுக்க தெரியுமென எடுக்கப்பட்ட படமே அரண்மனை.
சமீபகாலமாக சுந்தர் சி இயக்கிய ஆக்சன், வந்தா ராஜா வருவேன் போன்ற எந்த ஒரு படமும் வெற்றியை கொடுக்கவில்லை. இதனை சுதாரித்து கொண்ட சுந்தர் சி அவர்கள் தற்போது பேய் படங்கள் மற்றும் காமெடி படங்களில் தனக்கு செட்டாகும் என்ற நிலையில் தற்போது அவர் அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்க உள்ளார்.
படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் ஆர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மற்றும் இப்படத்தில் மூன்றாவது ஹீரோயினாக பிக் பாஸ் சீசன் 2 இல் கலந்துகொண்ட சாக்க்ஷி அகர்வால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்பு ஆர்யா அவர்களுடன் டெடி என்ற படத்தில் நடித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சாக்ஷி அகர்வால் அடிகடி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அதனால் இவரை கவர்ச்சிக்காக படத்தில் இணைத்துள்ளர்கள் என கூறுகிறார்கள் அதனால் இளசுகள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.