மிரட்டலாக வெளியானது அரண்மனை-3 திரைப்படத்தின் டிரைலர்.! செம்ம திகிலாக இருக்குதே அசத்தலான சாதனை

0

சுந்தர் சி இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு சுந்தர் சி ஹன்சிகா மோட்வானி, குஷ்பூ கோவை சரளா, மனோபாலா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, சந்தானம், சித்தார்த் த்ரிஷா, பூனம் பஜ்வா, ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரை படம்தான் அரண்மனை இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது அதுமட்டுமில்லாமல் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

இதனைத்தொடர்ந்து 2016ஆம் ஆண்டு சுந்தர் சி இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார். இந்த திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று  வசூல் ரீதியாக வெற்றி பெற்றது அரண்மனை இரண்டாவது பாகத்தை தொடர்ந்து தற்போது சுந்தர் சி அவர்கள் மூன்றாவது பாகத்தை இயக்கிய உள்ளார்.

இந்த திரைப்படத்தில் சுந்தர்சி, ஆர்யா, ராசி கண்ணா, சாக்ஷி அகர்வால், ஆண்ட்ரியா விவேக், யோகிபாபு, மனோபாலா, மைனா நந்தினி, சம்பத் ராஜ், நளினி, சாக்ஷி அகர்வால் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் ஆர்யா நடித்துள்ளதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது இந்தநிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது இந்த திரைப்படத்தின் டிரைலர் பார்ப்பவர்களை திகிலில் மிரட்டியுள்ளது. இந்த ட்ரைலர் வெளியாகி இதுவரை 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

இதோ ட்ரைலர்.