அரண்மனை 3 சண்டைக் காட்சிகளுக்கு 2 கோடியில் மிகவும் பிரமாண்ட செட்.! சுந்தர் சி அதிரடி..

0

aranmanaai 3 set on 2 crores: சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை முதல் பாகம், இரண்டாம் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனத்தையும் பெற்றுள்ளது.

இதனையடுத்து அரண்மனை மூன்றாம் பாகத்தை சுந்தர் இயக்கப்போவதாக ஏற்கனவே பல தகவல்கள் வெளிவந்தது .

இந்நிலையில் தற்போது அரண்மனை மூன்றாம் பாகத்தை சுந்தர் சி ஆர்யாவை வைத்து இயக்கிக் கொண்டு வருகிறார்.

இந்த படத்திற்காக E.v.p பிலிம் சிட்டியில் 2 கோடி செலவில் கலை இயக்குனர் குருராஜின் பிளானில் அற்புதமாக 2 கோடி செலவில் அரண்மனை செட் போட்டு உள்ளார்கள்.

சுந்தர் சியுடன் ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர் ஹெயின் இணைந்துள்ளார் அரண்மனை மூன்றாம் பாகத்தில்  ஆர்யாவை வைத்து சண்டைக்காட்சிகள் 11 நாட்களாக 2 கோடி மதிப்புள்ள அரண்மனை செட்டில் நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த சண்டைக்காட்சிகளில் ஆர்யா, ராஷி கண்ணா, சுந்தர் சி, சம்பத், மதுசூதன் ராவ் போன்ற பல நட்சத்திரங்கள் இந்த ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து வருகிறார்கள்