விஜய்யின் அரபி குத்துப்பாடலுக்கு நடனமாடிய குஷி பட நடிகை மற்றும் சூர்யா பட நடிகை.! ஒவ்வொன்றும் வேற ரகம் எனக்கூறும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது மேலும் பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் பீஸ்ட் படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ளார் அந்த பாடலுக்கு அனிருத் தான் இசை அமைத்துள்ளார் அனிருத் இசையில் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வைரலாகி வருகிறது. மேலும் காதலர் தினத்தில் வெளியாகிய அரபிக்குது பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது அந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் நடனமாடி வீடியோவை வெளியிட்டு வந்தார்கள்.

அந்த வகையில் பல நடிகைகள் இதற்கு நடனமாடியுள்ளார்கள் யாஷிகா ஆனந்த், ராஷ்மிகா மந்தனா, சமந்தா, ஜெய், அமிர்தா ஐயர், மணிமேகலை என பல நடிகைகளை கூறிக் கொண்டே போகலாம் அந்த லிஸ்டில் தற்பொழுது 3 அழகு நடிகைகள் ஒரே நேரத்தில் அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

குஷி திரைப்படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து நடனமாடிய ஷில்பா ஷெட்டி மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று திரைப் படத்தில் நடித்திருந்த ரகுல் ப்ரீத் சிங் பாலிவுட் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகிய மூவரும் அரபிக் குத்து பாடலுக்கு செம ஸ்டைலாக நடனமாடுகிறார்கள்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் நடன நிகழ்ச்சி ஒன்றுக்கு ஷில்பா ஷெட்டி நடுவராக இருந்துள்ளார் இந்த நிலையில் ஜாக்லின், ரகுல் பிரீத் சிங், ஜான் ஆபிரகாம் ஆகிய மூவரும் விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள் அப்பொழுது அரபி குத்து பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களை மிரள வைத்துள்ளார்கள்.

ஜான் ஆபிரகாம், ரகுல் பிரீத் சிங், ஜாக்லின் ஆகிய மூவரும் இணைந்து அட்டாக் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி திரையரங்குக்கு வர இருக்கிறது இந்த நிலையில் இவர்களின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் பீஸ்ட் திரைப்படத்தில் செல்வராகவன், யோகி பாபு, அபர்ணா தாஸ் பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

https://www.youtube.com/watch?v=erIc2veg-ww

Leave a Comment