என் தந்தை மோசடியாளரா.? இதையெல்லாம் மறந்து விட்டீர்களா.. ஏ.ஆர்.ரகுமான் மகள் ஆதங்கம்

AR Rahman: ஏ.ஆர் ரகுமானை ரசிகர்கள் மோசடியாளர் என விமர்சனம் செய்து வந்த நிலையில் இவருடைய மகள் எனது தந்தையா மோசடியாளரா? அவர் செய்தது நினைவில்லையா? என மிகவும் கோபமாக அவர் வெளியிட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் திறந்தவெளி அரங்கில் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்தினார். ஏ.ஆர் ரகுமானின் ரசிகர்கள் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அதிக ஆர்வமுடன் டிக்கட்டுகளை வாங்கி சென்றனர்.

அப்படி டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டாலும் ஏ.ஆர் ரகுமானுக்காக 30 ஆயிரம் வரை பணம் கொடுத்து டிக்கெட் வாங்கினார்கள். இவ்வாறு பல ஆயிரம் செலவு செய்தும் நிம்மதியாக ஏ.ஆர் ரகுமானின் நிகழ்ச்சியை கண்டு களிக்க முடியவில்லை. எனவே இதன் காரணமாக அஜித்தின் குடும்பத்தினர்கள் மட்டும் விஐபி இருக்கையில் அமர்ந்து சந்தோஷமாக இந்நிகழ்ச்சியை கண்டு களித்தார்கள்.

ஆனால் பணம் கொடுத்து சென்ற எங்களால் இந்நிகழ்ச்சியை பார்க்க முடியவில்லை என்று ஆதங்கத்துடன் ரசிகர்கள் கூறியிருந்தனர். மேலும் டிக்கட்டுகள் அளவுக்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டது, வாகனங்களுக்கு சரியான பார்க்கிங் வசதி செய்யாதது, பார்வையாளர்கள் வந்து செல்வதற்கு நான்கு ஐந்து வாயில்கள் ஏற்பாடு செய்யாதது, பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என ஏராளமான குளறுபடிகள் நடந்தது.

இவ்வாறு சரியாக ஏற்பாடுகள் செய்யாத நிகழ்ச்சிக்கு வந்த மக்கள் மீண்டும் பார்க்க முடியாமல் திரும்பிச் சென்றனர் மேலும் தங்களது குமுறல்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்த நிலையில் இதனால் பலரும் விமர்சனம் செய்தனர். இவ்வாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சரியாக காரணத்தினால் ஏ.ஆர் ரகுமானை திட்டி தீர்த்து வந்தார்கள்  இதுவரையிலும் கிடைக்காத அவமானம் இதன் மூலம் ஏ.ஆர் ரகுமானுக்கு கிடைத்துவிட்டது.

அப்படியே ஏ ஆர் ரகுமான் மோசடிக்காரர் இன்று பதிவு செய்ததால் இதற்கு பதில் அளித்த ஏ.ஆர் ரகுமான் அரங்கிற்குள் நுழைய முடியாமல் போனவர்கள் உங்களது டிக்கெட் காப்பியை அனுப்பி வைக்கவும் எங்களது குழுவினரு உடனடியாக பதில் கொடுப்பார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் என்னை சிலர் ஆடு என்கின்றார்கள் மக்கள் விழித்துக் கொள்ள இந்த முறை நானே பலிக்காடு ஆகிறேன்.. நடந்த குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்.. கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப வரும் காலங்களில் சென்னையில் உலக தர கட்டமைப்பு, சுற்றுலா மேம்பாடு சிறந்து விளங்க வாய்ப்புகளை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் தனது தந்தை மோசடிக்காரர் என்று பதிவிட்டதற்கு ரகுமானின் மகளான கதீஜாவும் தனது தந்தைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதாவது, ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்து சமூக வலைதளங்களில் ஏ.ஆர் ரகுமானை மோசடி செய்பவர் என்று கூறினார். இந்த இசை நிகழ்ச்சியை வைத்து சிலர் மலிவான அரசியல் செய்கின்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது 100 சதவீதம் தவறு உள்ளது ஆனால் அதற்கான பொறுப்பை என் தந்தை ஏற்றுக்கொண்டார்.

ஆனால் என் தந்தை மோசடி செய்வது போன்று பேசுவது வருத்தமளிக்கிறது. இதற்கு முன் கேரள மழை வெள்ளம், கோவிட் பாதிப்பு உள்ளிட்ட காலங்களில் என் தந்த இசை நிகழ்ச்சி நடத்தி அந்த நிதியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார். அதேபோல் லைட் மேன்களுக்காக இசை நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டினார். இவரைப் பற்றி தவறாக பேசும் உன் இதையெல்லாம் கொஞ்சம் நினைத்து பாருங்கள் என கோபத்துடன் தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.