என் தந்தையின் கால் விரலுக்கு ஈடாகுமா ஆர் ரகுமானின் ஆஸ்கார் விருது..! பிரபல நடிகரின் பேச்சால் ஆத்திரமடைந்த ரசிகர்கள்..!

0

தெலுங்கில் முன்னணி நடிகராகவும் மூத்த நடிகராகவும் வலம் வருபவர் தான் நடிகர் பாலகிருஷ்ணா இவர் தெலுங்கில் இதுவரை 100 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகருக்கு தற்போது 61 வயது ஆகிவிட்டது ஆனாலும் மீண்டும் திரையுலகில் ஹீரோவாக தான் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நமது நடிகர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பது மட்டுமல்லாமல் சில திரைப்படங்களை இயக்கியும் தயாரித்தும் தன்னுடைய  திறமையை வெளிக்காட்டி உள்ளார். இது போதாதென்று தற்போது மக்களுக்கு தொண்டு செய்யும் வகையில் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறாராம்.

அந்த வகையில் தன்னுடைய தந்தை தொடங்கிய தெலுங்கு தேச கட்சியில் ஈடுபட்டு வந்தது மட்டுமல்லாமல் தற்போது ஆந்திர மாநில தொகுதியில் எம்எல்ஏ வாகவும் உள்ளார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய நமது நடிகர் ஆஸ்கார் விருது வென்ற ஏ ஆர் ரகுமான் மற்றும் நாட்டின் பாரத ரத்னா விருது ஆகியவற்றை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறியது என்னவென்றால் ஏ ஆர் ரகுமான் ஆஸ்கார் விருது வாங்கி இருப்பதாக கேள்விப்பட்டு உள்ளேன் ஆனால் அவர் யார் என்று எனக்கு தெரியாது அதுமட்டுமில்லாமல் பாரத ரத்னா விருது போன்றவை என்னுடைய அப்பாவின் கால் விரலுக்கு சமம் என்றும் என்னுடைய காலடிக்கு சமம் என்றும் கூறி உள்ளார்.

இவ்வாறு பெயர்போன விருதுகள் அனைத்துமே என்னுடைய குடும்பம் பெரிய தெலுங்கு திரை உலகில் பங்களித்ததற்கு ஈடாகாது. இதற்காக  வருத்தப்பட வேண்டியது விருதுகள்  தான் என்னுடைய குடும்பம் கிடையாது.

இவ்வாறு பாலகிருஷ்ணா கூறியதன் காரணமாக பல்வேறு தரப்பினரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.  அதுமட்டுமில்லாமல் நம்முடைய நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் இருக்கும் ஆஸ்கர் விருது மற்றும் பாரத ரத்னா விருது ஏ ஆர் ரகுமான் ஆகிய அனைவரையும் அவமதித்து பேசியதன் காரணமாக ரசிகர்கள் செம காண்டில் உள்ளார்.

ar raguman
ar raguman