ஏ.ஆர்.ரகுமான் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது கோப்ரா படத்தின் அப்டேட்.!

0
A.R.Rahman
A.R.Rahman

தமிழ் திரை உலகில் பல ஹிட்டடித்த திரைப்படங்களில் இசையமைத்தவர் தான் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்.

இவரது தாய் சமீபத்தில் இறந்தது அவருக்கு பெரிய சோகத்தை கொடுத்தது மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களுக்கும் அந்த செய்தி வருத்தத்தில் ஆழ்த்தியது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தற்பொழுது விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் கோப்ரா படத்தில் இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார் இதனையடுத்து இந்த திரைப்படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கதையை கொண்டு உருவாகி வருகிறது.

இந்நிலையில் இன்று ஏ.ஆர்.ரகுமான் பிறந்தநாளை முன்னிட்டு கோப்ரா படக்குழு ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான தகவலை பகிர்ந்துள்ளது.

அதில் ஏ.ஆர். ரகுமானுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கோப்ரா படக்குழு இந்த திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை போஸ்டருடன் வெளியிட்டுள்ளது.

மேலும் கோப்ரா படத்தின் டீசர் ஜனவரி 9ஆம் தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளி வந்ததால் ரசிகர்கள் பலரும் ஒரே உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் ஏ.ஆர். ரகுமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

A.R.Rahman
A.R.Rahman