பல கோடி மதிப்புள்ள காரை வாங்கிய தன்னுடைய மகள்களின் புகைப்படத்தை வெளியிட்ட ஏ.ஆர் ரகுமான்.! வாயை பிளக்கும் ரசிகர்கள்..

0
ar-raguman
ar-raguman

ஏ.ஆர் ரகுமான் அவர்களின் மகள்கள் வாங்கிய கார் பற்றிய தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தன்னுடைய இசையினால் ஒட்டுமொத்த மக்களையும் வளைத்து போட்டவர் தான் ஏ.ஆர் ரகுமான் மேலும் இவரை ஆஸ்கார் நாயகன் எனவும் அழைத்து வரும் நிலையில் தற்போது இவர் லால் சலாம் என்ற திரைப்படத்தில் பாடல்களை இயக்குவதில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

இந்த படத்தினை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் நிலையில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் முக்கியமாக ரஜினிகாந்த் முதன்முறையாக தன்னுடைய மகள் இயக்கம் திரைப்படத்தில் கௌரவ கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது.

மேலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் ஏ.ஆர் ரகுமான் சமீபத்தில் தன்னுடைய மகள்கள் வாங்கிய விலை உயர்ந்த கார் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதாவது இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் அவர்களின் கதீஜா ரகுமான், மற்றும் ரஹிமா ரகுமான் இருவரும் கார் அருகில் நின்றபடி புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

இதில் கதீஜா இசை கலைஞர் மற்றும் ஏ.ஆர் ரகுமான் அறக்கட்டளையை இயற்கை வருகிறார். மற்றவர்கள் இயக்குனர் பாடல், தயாரிப்பு, என பல துறைகளிலும் பணியாற்றி வரும் நிலையில் தற்பொழுது ஏ.ஆர் ரகுமானின் இரு மகள்களும் இணைந்து எலக்ட்ரிக் காரை வாங்கி உள்ளதாக தன்னுடைய சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

ar raguman
ar raguman

இந்நிலையில் இந்த கார் இந்தியாவில் இருக்கும் மிக அதிக விலை உயர்ந்த எலக்ட்ரிக் கார் என்பதை குறிப்பிடத்தக்கது கார்ப்பரேஷன் நிறுவனமானது 18 விதமான கார் வகைகளை தயாரித்து வருகிறது அதில் இவர்கள் ப்ளூ மெட்டாலிக் வகையான காரை வாங்கி உள்ளார்கள் இந்த காரின் ஷோரூம் விலை மட்டும் 1.5 இலிருந்து 2.5 கோடி ரூபாய் வர இருக்கும் என தகவல் கிடைத்துள்ளது. இது வெறும் ஷோரூம் விலை மட்டும் தான் அப்படி அந்த காரில் என்ன இருக்கிறது என்று பார்த்தால் கார் முன்பும் பின்பும் என இரு பக்கமும் தனித்தனியாக எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது மேலும் பயனார் கார்கள் டர்போ வகைகளுடன் கிடைக்கிறது.