கொரோனா நிவாரண நிதிக்காக பாடல் வழியாக நிதி திரட்டும் ஏ ஆர் ரகுமான்.!! வைரலாகும் வீடியோ!!

AR Rahman is raising funds for the Corona Relief Fund through song: உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதன் தாக்கத்தினை அதிகரித்த வண்ணமே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீட்டித்த வண்ணமே உள்ளது.

இதனால் வறுமையில் வாடும் கூலி தொழிலாளர்கள் தனது அன்றாட வாழ்க்கைக்கே போராடி வருகின்றனர். அவர்களக்கு உதவும் வகையில் தொழிலதிபர்கள், திரைபிரபலங்கள், அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைவரும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் மேலும் மத்திய மற்றும் மாநில அரசு, சுகாதாரத்தறையினர்,  காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், சமூக ஆர்வலர்கள்,  நடிகர், நடிகைகள், பாடகர்கள் என அனைவரும் கொரோனா விழிப்புணர்வு வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் ஏ ஆர் ரகுமான் அவர்களும் கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த பாடலை சுதர்சன் ஜோஷி எழுத, ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் கத்திஜா ரஹ்மான், சிவமணி, சுருதிஹாசன், மிகா சிங், ஜோனிட காந்தி, மோகித் சவுகான், ஜாவேத் அலி, சித் ஶ்ரீராம், நித்தி மோகன் போன்ற பல பிரபல பின்னணி பாடகர்கள் பாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடலை ஹெச்டிஎப்சி வங்கி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த பாடலை ஷேர் செய்தால் ஒவ்வொரு ஷேருக்கும் 500 ரூபாய் பிரதமரின் கொரோனா நிதிக்கு செல்லுமாறு ஹெச்டிஎப்சி ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் ரகுமான் தனது ட்விட்டர் பதிவில், இந்த சவாலுக்கான நேரத்தில் இந்த பாடலை கேட்டு நம்பிக்கையுடனும்  தைரியத்துடனும் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆகவே ஏ ஆர் ரகுமான் அவர்கள் பல முன்னணி பாடகர்கள் மற்றும் பாடலாசிரியர் உடன் இணைந்து இந்த பாடலை வெளியிட்டுள்ளார் என்று கூறியிருக்கிறார்.

தற்போது இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்தப் பாடல்.

Leave a Comment