தர்பார் தோல்விக்கு காரணம் இதுதான்.? அன்றே கணித்த அமீர்கான்.! உண்மையை ஒப்புக்கொண்ட ஏ ஆர் முருகதாஸ்.

Ar murugadoss : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தில் இருப்பவர் ஏ.ஆர் முருகதாஸ் இவர் முதன்முதலில் தீனா திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார். முதல் திரைப்படம் வெற்றி திரைப்படமாக அமைந்தது அடுத்தடுத்த திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் தீனா, ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி கத்தி, ஸ்பைடர், சர்கார், தர்பார் என பல திரைப்படங்களை இயக்கினார்.

இந்த நிலையில் தர்பார் படம் குறித்து ஏ ஆர் முருகதாஸ் வெளிப்படையாக பேசி உள்ளார். அந்த பேட்டியில் ஏ ஆர் முருகதாஸ் கூறியதாவது தர்பார் படத்தை தொடங்கும் பொழுது ரஜினி என்னிடம் மார்ச்சில் படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என கூறினார் ஏனென்றால் ஜூனில் மும்பையில் மழை காலம் தொடங்கும் ஆகஸ்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கட்சியை தொடங்குவார் என தெரிந்தது நான் ரஜினியின் தீவிர ரசிகன் அதனால் எந்த காரணத்தை கொண்டும் ரஜினி படத்தை இழக்க விரும்பவில்லை.

அதுமட்டுமில்லாமல் அன்றைய காலகட்டத்தில் ரஜினிக்கு கடைசி படமாக இருக்கும் என பலரும் கூறினார்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்   படத்தை தொடங்கலாம் என பிப்ரவரி மாதம் கூறினார் மார்ச் மாதத்தில் தொடங்கி முடித்துவிட வேண்டும் என சொன்னார் இந்த வாய்ப்பை இழந்து விடக்கூடாது என கணக்கு போட்டு பார்த்தேன் அங்கு தான் நான் தப்பு செய்துவிட்டேன். என்னதான் திறமை இருந்தாலும் திட்டமிடுதல் இல்லை என்றால் பாச்சா பலிக்காது என முருகதாஸ் கூறினார்.

அதுமட்டுமில்லாமல் மேலும் பேசிய முருகதாஸ் அமீர்கான் என்னிடம் ஒரு படத்தை அறிவிக்கும் பொழுதே அதன் ரிலீஸ் தேதியை அறிவித்தால் 50% அந்த படம் தோல்வியடையும் எனக் கூறியிருந்தார். கிட்டத்தட்ட 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்த பிறகு மட்டுமே ரிலீஸ் தேதி அறிவிக்க வேண்டும் எனவும் கூறினார் ஆனால் அது எந்த அளவு சரியாக இருக்கும் என்பதை நான் தர்பார் திரைப்படத்தில் உணர்ந்து விட்டேன்.

ஒரு வேகம் ஒரு ஆசை எல்லாம் இருந்தாலும் இயக்குனர் என்ற இடத்திலிருந்து கொண்டு என்னைக்கும் விட்டுக் கொடுத்து விடக்கூடாது என்ற எண்ணம் மட்டும் இருந்தது இப்ப வரும் இயக்குனர்கள் சரியான திட்டத்துடன் தான் வருகிறார்கள் தர்பார் திரைப்படத்தின் சூட்டிங் முடிந்த பிறகு கடைசி நேரத்தில் பல காட்சிகளை மாற்றி அமைத்தோம் என அந்த நேர்காணலில் கூறினார்.