ஏ ஆர் முருகதாஸின் அடுத்த படம்.! இப்படிப்பட்ட கதையா.? ஜெயிப்பாரா..

தமிழ் சினிமாவில் எடுத்தவுடனேயே டாப் நடிகர்களுக்கு பல ஹிட் படங்களை கொடுத்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மாறினார் ஏ ஆர் முருகதாஸ்.

தமிழில் இவர் தீனா, ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, ஸ்பைடர், சர்க்கார் என தொடர் அடுத்தடுத்த ஹிட் படங்களைக் கொடுத்தால் இந்திய அளவில் பேசப்படும் இயக்குனராக மாறியுள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் தோல்வியை கொடுக்காத இயகுனராக இவர் இருக்கிறார்.

மேலும் இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று உள்ளதால் தற்போது பல நடிகர்கள் இவர் படத்தில் நடிக்க போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய்யின் 65வது திரைப்படத்தை ஆர் முருகதாஸ் தான் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில பிரச்சனைகள் காரணமாக விஜயின் அந்த திரைப்படத்தை இயக்க முடியாமல் போனது.

விஜய் இவருக்கு இனிய படங்களை தர மாட்டார் என ஒரு சில வதந்திகளும் இருக்கின்றன இந்த நிலையில் முருகதாஸ் அடுத்ததாக ஒரு படத்தை இயக்க உள்ளார் என்ற தகவல்கள் சமீப காலமாக நிலவி வருகின்றன.

அதாவது ஏ ஆர் முருகதாஸ் அடுத்ததாக “பேன்டஸி திரைப்படம்” ஒன்றை இயக்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன மேலும் இப்படம் பேன் இந்தியா திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகின்றன.

எது எப்படியோ சினிமா உலகில் இயக்குனர்களுக்கும் தற்போது ரசிகர்கள் இருப்பதால் இந்த திரைப்படமும் முருகதாஸ்  அவர்களுக்கு வெற்றித் திரைப்படமாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment