ஏழாம் அறிவு படத்தை தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ்,சூர்யாவை அணுகாததற்கான காரணத்தை கண்டுபிடித்த ரசிகர்கள்.?

0

சூர்யா ஒரு வாரிசு நடிகரின் மகனாக இருந்தாலும் சினிமா உலகில் நுழைய பல இன்னல்களை சந்தித்தது தான் வந்துள்ளார். சினிமா உலகில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை ஆரம்ப காலகட்டத்தில் பல சிறப்பு கூறிய படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை அவரால் பெற முடியாமல் போனது. அத்தகைய பெயரை அவருக்கு பெற்றுக் கொடுத்தவர் தான் ஏ ஆர் முருகதாஸ் இவர் சூர்யாவுடன் கை கோர்க்க கஜினி மற்றும் ஏழாம் அறிவு போன்ற இரண்டு திரைப்படங்கள் இயக்கி இருந்தார்.

அத்தகைய படங்கள் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது இத்திரைப்படங்களை தொடர்ந்து அவர் சினிமா உலகில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தனர்.

இப்படி இவர்கள் இருவரும் சிறந்த கூட்டணியாக மக்கள் மத்தியில் கருதப்பட்டு இருந்த நிலையில் இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து  முருகதாஸ், சூர்யா இருவரும் இணைந்து பணியாற்றவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

கிட்டத்தட்ட 9 வருடங்களாக இந்த வெற்றி கூட்டணி சேராமல் இருந்ததால் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இதற்கான காரணத்தை ரசிகர்கள் தேட ஆரம்பித்தனர். அதற்கு  தற்போது விடை கிடைத்துள்ளது.

சூர்யாவுடன் இணைந்து ஹிட் படங்களை கொடுத்த பிறகு ஏஆர் முருகதாஸின் பயணமும் வெற்றியை நோக்கி பயணித்தது அந்த வகையில் தளபதி விஜயுடன் இணைந்து துப்பாக்கி எனும் திரைப்படத்தை வெற்றிப்படமாக பெற்றுக் கொடுப்பதன் மூலம் விஜயை வைத்து அடுத்தடுத்த படங்களை இயக்கி தன்னை ஒரு முன்னணி இயக்குனராக மாற்றிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் மிகப் பெரிய அளவில் தனது சம்பளத்தையும் உயர்த்தி கொண்டு காசு பார்க்க ஆரம்பித்தார்.

இதன் விளைவாகவே அவர் தற்பொழுது வரையிலும் சூர்யாவை அணுகவில்லை மேலும் சமீபகாலமாக சூர்யா அவர்கள் தோல்வி படங்களை கொடுத்து வருவதால் அவரை அணுகவில்லை என்பது தெரிய வருகிறது.

ஏ ஆர் முருகதாஸ் என்னும் ஒரு நபரை அஜித், சூர்யா அவர்கள் தான் வளர்த்து விட்டனர் என்பது ஊரறிந்த விஷயம் ஆனால் தற்போது அவர்களையே கண்டுகொள்ளாமல் இவர் மற்ற முன்னணி நடிகர்களை வைத்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டு வருகிறார்.

சூர்யா தற்போது வாடிவாசல் போன்ற சிறப்புக்குரிய இயக்குனரின் படங்களை கையில் வைத்திருப்பதால் இனி முருகதாஸ் பக்கமாக செல்ல போவதில்லை என தெரியவருகிறது.