கொரோனா பிரச்சனையினால் கிட்டதட்ட ஆறு மாத காலங்கள் உலகம் முழுவதும் முடங்கிக் கிடந்தது. அந்த வகையில் ஒன்று தியேட்டர் ரசிகர்கள் தியேட்டரில் போய் படம் பார்க்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தார்கள்.
பிறகு கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து பொங்கலை முன்னிட்டு முதல் முதலாக விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆனது. 50 சதவீத பெயர் மட்டுமே தியேட்டரில் அனுமதிக்கப்பட்டார்கள்.
மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்திக் நடித்திருந்த சுல்தான் மற்றும் தனுஷ் நடித்திருந்த கர்ணன் போன்ற திரைப்படங்கள் 100 சதவீத பார்வையாளர்களுடன் ரிலீஸ் செய்து மாபெரும் வசூல் வேட்டை செய்து வந்தது. பிறகு மீண்டும் கொரோனா தாக்கம் அதிகமாக ஏற்பட்டு வருவதால் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று அரசு உத்தரவு தெரிவித்துள்ளது.
எனவே இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் இடியை தூக்கிப் போட்டுள்ளது. அதோடு கர்ணன் திரைப்படம் ரிலீஸ் செய்த முதல் நாள் 100%பார்வையாளர்களுடன் வசூல் பெரிய அளவில் பெற்றது. பிறகு அடுத்தடுத்த நாட்களில் வசூல் பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்நிலையில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிப்பதால் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாக இருந்த 5 படங்கள் தற்போது ரிலீஸ் ஆகாமல் இருந்து வருகிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாக்டர்,விஜய் சேதுபதி நடித்து வரும் துக்ளக் தர்பார் மற்றும் லாபம், சசி குமார் நடித்துள்ள எம்ஜிஆரின் மகன், கங்கனா ரனாவத் நடித்துள்ள தலைவி போன்ற திரைப்படங்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருந்து வந்தது.
ஆனால் தற்பொழுது இந்த திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதற்கு தாமதமாகும் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் மே மாதம் ரம்ஜான் விடுமுறையில் ரிலீசாகும் என்று கூறப்பட்டது ஆனால் தற்பொழுது அந்த திரைப்படம் ரிலீஸ் ஆகாது என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறி வருகிறார்கள்.