தோனி செய்தால் பாராட்டு.. ரோகித் சர்மா செய்தால் பாராட்டு கிடையாது.? கவாஸ்கர் வேதனை

ஐபிஎல் 16வது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது இன்று  குஜராத்தை டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பல பரீட்சை நடத்துகின்றன.  இதில் வெற்றி பெரும் அணி இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உடன் பலப்பரிசை நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் ரோகித் சர்மா, தோனி குறித்து கவாஸ்கர் பேசியது சமூக வலைதள பக்கத்தில் மிகப்பெரிய ஒரு செய்தியாக மாறி உள்ளது அதில் அவர் சொன்னது..

எப்போதுமே ரோகித் சர்மாவுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்ததே கிடையாது ஆனால் அவர் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை மும்பை அணிக்கு வென்று கொடுத்திருக்கிறார். நான் உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்  பதோனிக்கு பந்து வீசும் போது ஆகாஷ் மத்வால் ஸ்டம்பின் வலது பக்கம் திசையில் இருந்து ஓடி வந்து விக்கெட் எடுப்பார் அதுவே நிக்கோலஸ் பூரான் பேட்டிங் செய்யும் போது ஸ்டெம்பின் இடது பக்கம் திசையில் ஓடி வந்து அவருடைய விக்கெட்டை வீழ்த்தினார் இதற்கு முழு காரணம் ரோகித் சர்மா தான்..

எந்த பந்துவீச்சாளரும் இப்படி ஒவ்வொரு பந்திருக்கும் மாறி மாறி பந்து வீச மாட்டார்கள். ஏனென்றால் அது அவருடைய பந்துவீச்சின் ரீதத்தை பாதிக்க செய்துவிடும் ஆனால் இடது கை பேட்ஸ்மேன் வந்தவுடன் இப்படி ஒரு மாற்றத்தை மத்வால் செய்து அந்த விக்கெட்டை வீழ்த்தினார்.

KAVASKAR
KAVASKAR

ஆனால் இதற்கு யாரும் ரோகித் சர்மாவை பாராட்டவே இல்லை இதுவே சிஎஸ்கே போட்டியில் தோனி இருக்கும் போது இவ்வாறு நடந்திருந்தால் அனைவரும் தோனியால் தான் இந்த விக்கெட் கிடைத்தது என பாராட்டி இருப்பார்கள் ஆனால் ரோகித் என்பதால் யாருமே கண்டு கொள்ளவில்லை..

MI VS CSK
MI VS CSK

இதேபோன்று நேற்றைய ஆட்டத்தில் மும்பை முதலில் பேட்டிங் செய்த போது வதேரா இன்பேக்ட் வீரராக களம் இறக்கினார் எப்பொழுதும் முதலில் பேட்டிங் செய்யும் பணி எந்த பேட்ஸ்மேனையும் இம்பேக்ட் வீரராக கொண்டு வந்ததே கிடையாது. ஆனால் ரோஹித்  சர்மா தான் இந்த மாற்றத்தை செய்தார் இதற்கு அவரை யாரும் பாராட்டவே இல்லை என கவாஸ்கர் கூறினார்.

Leave a Comment