எது எப்படியோ இந்த விஷயத்தில் நீங்களும் ஐஸ்வர்யா மேனனும் zero தான்..! ரசிகன் போட்ட பதிவிற்கு பிரியா கொடுத்த பதில்..!

0
priya-bahavani-1
priya-bahavani-1

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர் இவ்வாறு பிரபலமான நமது நடிகை முதன் முதலாக செய்தி வாசிப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார் இதன் மூலமாக அவருக்கு விஜய் டிவியில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.

இவ்வாறு இந்த சீரியலில் நமது நடிகை தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளி காட்டியதன் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்கள் அந்த குவிந்ததுமட்டுமில்லாமல் தற்போது சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை கூட பெற்றுவிட்டால் அந்த வகையில் நடிப்பில் வெளியான மேயாதமான் என்ற திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக என்ட்ரீ கொடுத்தார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் நடித்த ஏகபோக வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல்  பிரபல இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் இணைந்து மான்ஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் அந்த திரைப்படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் உடன் இணைந்த ஓ மணப்பெண்னே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இவ்வாறு தொடர்ந்து பல்வேறு திரைப்பட வாய்ப்பை பெற்ற பிரியா பவானி சங்கர் ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் இழுத்து விட்டார் என்றே சொல்லலாம்.

அதுமட்டுமில்லாமல் தற்போது இவருடைய நடிப்பில் குருதி ஆட்டம் பொம்மை ஹாஸ்டல் ருத்ரன் பத்தல திருச்சிற்றம்பலம் அகிலன் இந்தியன் 2 மற்றும் ஹரி இயக்கத்தில் யானை மற்றும் எஸ் ஜே சூர்யா உடன் பொம்மை போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். என்னதான் பிரபல கதாநாயகியாக இருந்தாலும் இவர் சமீபகாலமாக ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ் கமெண்டுகளை பெற்று வருகிறார்.

priya bhavani shankar-1
priya bhavani shankar-1

அந்த வகையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் நிஜத்தில் நீங்கள் தன்மையான நபராக இருக்கலாம் ஆனால் நடிப்பை பொருத்தவரை நீங்களும் ஐஸ்வர்யா மேனனும் ஒரு zero என்று பதிவிட்டிருந்தார். எவ்வாறு அவர் வெளியிட்ட பதிவை பார்த்த நமது பிரியா பவானி சங்கர் அதை எங்களுடைய இயக்குனர் சொல்லட்டும் நான் அதை சரி செய்து கொள்கிறேன் நீங்கள் இதற்காக பதட்டப்பட வேண்டாம் chill என்று பதிவிட்டுள்ளார்.