தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா. சமீப காலமாக தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் இவர் கடைசியாக நடித்த சூரரைப்போற்று, ஜெய்பீம் ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடுத்த நிலையில் இப்போது சிறந்த இயக்குனர்களிடம் கதை கேட்டு அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளார்.
இந்த நிலையில் எதற்கும் துணிந்தவன், வாடிவாசல் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார் அதில் முதலாவதாக பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த திரைப்படமும் சமூக கருத்துகளை எடுத்துரைக்கும் திரைப் படமாக இருக்கும் என ஆரம்பத்திலேயே கூறப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவத்தை மையமாக வைத்துதான் இந்த திரைப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் இந்த திரைப்படத்தை பார்க்க மக்கள் மற்றும் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார் மற்றபடி யார் யார் என்பதை தெளிவாக கூறவில்லை.
எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மற்ற வேலைகளை வெற்றிகரமாக முடித்து பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியாக ரெடியாக இருந்தது ஆனால் கொரோனா மூன்றாவது கட்ட அலை ஆரம்பித்து அதன் காரணமாக படத்தை மார்ச் 10 ஆம் தேதி தொழிலை செய்ய முடிவெடுத்துள்ளது. எது எப்படியோ ரிலீஸானால் சரிதான் என ரசிகர்களும்காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் பாண்டிராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் எதற்கும் துணிந்தவன் மற்றும் சூர்யா குறித்து பேசியிருந்தார் அதிலும் குறிப்பாக சூர்யா குறித்து பேசினார் சூர்யாவிற்கு பிரம்மாண்ட கதை ஒன்றை எழுதி இருந்தேன் அந்த படத்திற்கு பல மடங்கு உழைக்க வேண்டியதாக இருந்தது அந்த கதையை தயாரிப்பாளர் கலாநிதி மாறன் உட்பட அனைவருக்கும் பிடித்து இருந்தது.
ஆனால் கலாநிதி மாறன் சார் சூர்யாவை கிராமத்திற்கு கூட்டிச் செல்வோம் என எனவே எதற்கும் துணிந்தவன் கதையை சூர்யாவுக்காக தேர்வு செய்தார் பின் சூர்யாவிடம் எதற்கும் துணிந்தவன் கதையை இந்த படத்தில் பணியாற்றினோம். உண்மையில் சொல்லப்போனால் எதற்கும் துணிந்தவன் கதை வேறொரு நடிகருக்காக எழுதப்பட்ட கதைதான். ஆனால் இப்பொழுது சூர்யாஇப்பொழுது நடித்து முடித்துள்ள தாகக் கூறினார்.