ப்ரீ புக்கிங்கில் தட்டி தூக்கிக்கொண்டு முன்னாடி வரும் “ஜவான்” – டாப் 10 லிஸ்டில் எத்தனாவது இடம் தெரியுமா.?

Jawan Movie
Jawan Movie

Jawan Movie : தமிழ் சினிமாவில் இன்று டாப் நடிகர்களின் படங்கள் வெளிவந்து புதிய வசூல் சாதனை படைக்கின்றன அந்த வகையில் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று இதுவரை 605 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது நிச்சயம் 700 கோடியை தொட்டு புதிய சாதனை படைக்கும் என தெரிய வருகிறது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படம் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகிய உள்ள ஜவான் திரைப்படம் தான் இந்த படம் ஷாருக்கானுக்கு கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது படத்தில் அவருடன் இணைந்து நயன்தாரா, யோகி பாபு, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியாமணி என பல திரைப் பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

படம் நாளை கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுவதால் தற்பொழுது பலரும் போட்டி போட்டுக் கொண்டே டிக்கெட்டை புக் பண்ணி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அளவில் அதிகம் அதிக டிக்கெட் விற்கப்பட்ட படங்கள் குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவான பாகுபலி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து பாகுபலி 2 எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. படம் ரிலீசுக்கு முன்வரே டிக்கெட் புக்கிங் மட்டும் சுமார் – 6,50,000 டிக்கெட் விற்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக ஷாருக்கானின் பதான் திரைப்படம்  – 5,56,000 டிக்கெட்டுகள் விற்கப்பட்டது. மூன்றாவது இடத்தில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் உருவான கேஜிஎப் 2 – 5,15,000 டிக்கெட்டுகள் விற்கப்பட்டன அடுத்த இடத்தில் பாலிவுட் படமான வார் – 4,10,000 டிக்கெட்டு விற்கப்பட்டன.  ஐந்தாவது இடத்தில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் –  3,91,000 டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன அடுத்தடுத்த இடங்களில் பாலிவுட் படங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.