பாக்க தான் பூனை மாதிரி.. டேக் ஓகே சொன்னா புலியா மாறிடுவாரு.. நடிகர் விஜய் பற்றி ஆச்சரியமாக பேசிய “அனுஷ்கா”

Anushka : தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா. தொடர்ந்து டாப் ஹீரோக்களுடன் படம் பண்ணி வந்த இவர் இஞ்சி இடுப்பழகி படத்தின் போது உடல் எடையை ஏற்றி நடந்தார். அதன் பிறகு உடல் எடையை குறைக்க முடியாமல் இருப்பதால் இவருக்கு வாய்ப்புகள் குறைந்தது உள்ளது.

இருப்பினும் இவரது திறமையை பார்த்து ஆண்டுக்கு ஒன்று, இரண்டு வாய்ப்புகள் எட்டிப் பார்க்கின்றன இந்த நிலையில் நடிகை அனுஷ்கா விஜய் பற்றி பேசியது சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது “என் உச்சி மண்டேலே” பாடலின் படப்பிடிப்பதற்காக அவர் செட்டுக்கு வந்தார்.

நான் பயிற்சி செய்து கொண்டு இருந்தேன். அப்படியே அமர்ந்து விஜய் பார்த்துக் கொண்டே இருந்தார் அவர் ஒரு நல்ல நடன கலைஞர் என்று எனக்கு தெரியும் நான் இண்டஸ்ட்ரியில் ஒரு சின்ன நபர், ஷார்ட்டுக்காக ஒன்றாக நின்றோம் ஷார்ட் ஓகே  ஆனதும் அவரது ஆற்றலும் சக்தியும் நம்ப முடியாததாக இருந்தது..

ஒரு முறை பார்த்த பிறகு அவர் எப்படி அந்த மாதிரி நடனம் ஆடினார் என எனக்கு தெரியவில்லை அவர் நடனம் முழுவதும் பார்த்து அதிர்ச்சடைந்த நான் நடனமாடுவதை நிறுத்தினேன் அந்த இடத்தில் என்னால் நடனமாட முடியவில்லை.

ஒருவரால் எப்படி இவ்வளவு ஆற்றலுடன் நடனமாட முடிகிறது என்று நான் ஆச்சரியப்பட்டேன் என்றார். படம் பெருவளவு ரசிகர்களை கவரவில்லை என்றாலும் பாடல் மூளை முடுக்கெங்கும் ஹிட் அடித்தது. இந்த தகவலை தளபதி விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Comment