அஜித்தின் மெகா ஹிட் திரைப்படத்தில் நடிக்க மறுத்த அனுஷ்கா. எந்த திரைப்படம் தெரியுமா.

0
ajith-anuska
ajith-anuska

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்டவர் அஜித், இவர் சினிமா மட்டுமில்லாமல் மற்ற துறைகளிலும் திறமையானவராக வலம் வருகிறார். தல அஜித் ஆரம்பகாலத்தில் பல தோல்விகளை சந்தித்தாலும் தனது விடாமுயற்சியால் அதன்பிறகு வந்த காலங்களில் நல்ல படங்களில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் மெகாஹிட் திரைப்படங்களை தொடர்ச்சியாக கொடுத்து வருகிறார், குறிப்பாக சிறுத்தை சிவா இயக்கிய திரைப்படங்களில் தொடர்ச்சியாக ஹிட் கொடுத்து வந்தார் அஜித் கடைசியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்த விஸ்வாசம் மிகப் பெரிய ஹிட்டானது.

இந்த நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் மாதவன் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு, வெளியான திரைப்படம் ரெண்டு இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அனுஷ்கா தமிழில் முதல் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் தெலுங்கு சினிமா பக்கமே சென்றார் அங்கு ஏராளமான ஹிட் படங்களை கொடுத்தார்.

அதன்பின்னர் மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் விஜயுடன் வேட்டைக்காரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார், அதன்பிறகு கணிசமான படங்களில் நடித்து வந்த இவர் சூர்யாவுடன் நடித்த சிங்கம் திரைப்படத்தின் மூலம் ஹிட் கொடுத்தார்.

இதனைத்தொடர்ந்து ரஜினியின் லிங்கா அஜித்துடன் என்னை அறிந்தால் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த முதல் திரைப்படம் வீரம் இந்த திரைப்படம் மெகா ஹிட்டானது அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார், ஆனால் இந்த திரைப்படத்தில் அஜித் அவர்களுக்கு ஜோடியாக முதலில் சிவா அவர்கள்  அனுஷ்காவை தான் தேர்ந்த எடுத்தாராம்.

ஆனால் அவர் ஒரு சில காரணங்களால் நடிக்க மறுத்துவிட்டாராம் அதன்பின்னரே இந்த வாய்ப்பு தமன்னாவுக்கு சென்றது..