உடல் எடையைக் குறைத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியில் தலை காட்டிய அனுஷ்கா.! வைரலாகும் புகைப்படங்கள்.

நடிகை அனுஷ்கா ஷெட்டி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் தெலுங்கில் முதன்முறையாக சூப்பர் என்ற திரைப்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.அதன் பிறகு தமிழில் இரண்டு என்ற திரைப்படத்தில் முதன்முறையாக அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தை தொடர்ந்து அருந்ததி, வேட்டைக்காரன், சிங்கம் எனப் பல திரைப்படங்களில் நடித்து வந்தார், இவர் கடைசியாக தமிழில் பாக்மதி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் சங்கமித்ரா திரைப்படத்தில் கமிட்டானார். ஆனால் இந்த திரைப்படம் என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை.

தனது உடல் எடை அதிகரித்ததால் பட வாய்ப்பு குறைந்தது அதனால் நீண்ட காலமாக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் அனுஷ்கா ஷெட்டி ஈடுபட்டு வருகிறார், பிரபல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அனுஷ்கா ஷெட்டியின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் அனுஷ்கா ஷெட்டி உடல் எடையை குறைத்துள்ளார் என ரசிகர்கள் கூறுகிறார்கள்.

Leave a Comment