ப்ரோமோவின் மூலம் சர்ச்சையை ஏற்படுத்திய விஜய் டிவி சீரியலுக்கு போன் செய்து பாராட்டிய அனுஷ்கா.! சீரியல் நடிகை வெளியிட்ட பதிவு இதோ..

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை ஒளிபரப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் தொடர்ந்து மிகவும் வித்தியாசமான சீரியல்களில் ஒளிபரப்புவதை சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் போன்ற நான்கு தொலைக்காட்சிகளும் முன்னணி வகித்து வருகிறது. இவ்வாறு இவர்களுக்கிடையே போட்டி நிலவுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் தென்றல் வந்து என்னை தொடும். இந்த சீரியல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒளிபரப்பாகி குடும்ப இல்லத்தரசிகளின் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நாயகனாக வினோத் மற்றும் நாயகியாக பவித்ரா நடித்து வருகிறார்கள்.

இவர்களுடைய கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது இப்படிப்பட்ட நிலையில் இந்த தொடரை பார்த்துவிட்டு பிரபல நடிகை அனுஷ்கா செட்டி பாராட்டி இருக்கிறார் இது குறித்த தகவலை கதாநாயகி பவித்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது தாமதமான பதிவு என் உற்சாகத்தை வார்த்தைகளால் மொழிபெயர்க்க எனக்கு அதிக நேரம் தேவைப்பட்டது, ஒரு நீண்ட சோர்வான நாளை ஊக்கவிக்கப்படுத்தும் விதமான ஒருவரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது, அது வேறு யாருமில்லை அனுஷ்கா தான், நமது பாகுபலி நடிகை தேவசேனா.

இது ஒரு பிராங்கால் என நினைத்தேன் ஆனால் உண்மையை தெரிந்துக் கொண்ட பிறகு மிகவும் சந்தோஷம் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் இது ஒரு பாராட்டு அழைப்பு அனுஷ்கா எங்களை பாராட்டினார் அவர் மீதான மரியாதை எல்லைகளைக் கடந்தது அவர் எங்கள் தொடரை வழக்கமாக பார்ப்பதாக குறிப்பிட்டார். மேலும் அவரிடம் பெற்ற பாராட்டுகள் என் இதயத்தில் என்றென்றும் பொறிக்கப்படும் நான் மேகத்தில் பறக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் இதனுடைய ப்ரோமோ வெளிவந்து பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது அதாவது சம்பந்தமே இல்லாமல் நாயகைக்கு நாயகன் அவருடைய சம்மதம் இல்லாமல் தாலி கட்டி விட்டு இப்போ நான் உனக்கு தாலி கட்டி விட்டேன், பொட்டு வச்சுட்டேன், நீ என்ன எனக்கு பொண்டாட்டியா, போவியா என்று வசனம் இருந்ததால் இதனைப் பார்த்த பெண்கள் பலரும் அதிர்ச்சடைந்தார்கள்.

மேலும் இது குற்றம் என கூறப்பட்டது திருமணமாகிவிட்டதால் தாலியை கழட்டக்கூடாது என கதாநாயகி ஹீரோ கூட வாழ விரும்புவார் இந்த ப்ரோமோ வைரலாக திருவள்ளுவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஐபிஎஸ் தமிழகத்தில் பெண்களை துன்புறுத்துவதற்கு கொடுக்கப்படும் தண்டனைகள் குறித்த விளக்கத்தை அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment