படுக்கைக்கு அழைத்தார்.. பிரபல தயாரிப்பாளர்… பூகம்பத்தை கிளப்பிய சிவகார்த்திகேயன் பட நடிகை.!

sivakarthikeyan 2
sivakarthikeyan 2

Anu Emmanuel : மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமா மிகப்பெரிய வரவேற்பு பெற்றுக்கொடுக்கிறது அந்த வகையில் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த நடிகைகள் டாப்பில் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் விஷால் நடிப்பில் வெளியாக்கிய துப்பறிவாளன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் அனு இம்மானுவேல்.

துப்பறிவாளன் திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள காந்த கண்ணழகி என்ற பாடல் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தது இந்த நிலையில் தற்பொழுது அணு இமானுவேல் கார்த்தி உடன் இணைந்து ஜப்பான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார் அணு இமானுவேல் இந்த நிலையில் திடீரென ஒரு தகவலை வெளியிட்டு பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளார் அதாவது பட வாய்ப்புக்காக தன்னை படுகைக்கு அழைத்த பிரபலத்தை பற்றி கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அவர் கூறுகையில் தான் சினிமாவிற்கு வந்த புதிதில் என்னிடம் சிலர் தவறாக அணுகினார்கள் பட வாய்ப்பு வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என பல பெரிய மனுஷங்கள் என்னை அழைத்தார்கள். அதெல்லாம் போக அண்மையில் கூட மிகப்பெரிய தயாரிப்பாளர் ஒருவர் படுகைக்கு வருமாறு அழைத்தார் ஆனால் அதற்கெல்லாம் நான் அசராமல் என்னுடைய குடும்பத்தின் துணை உடன் பல பிரச்சனைகளை கையாண்டேன் இது போன்ற பிரச்சனைகள் வந்தால் குடும்பத்துடன் சேர்ந்து சந்திப்பது தான் சிறந்த விஷயம் எப்பொழுதும் நமக்கு குடும்பம் தான் உதவியாக இருக்கும்.

பொதுவாக எந்த துறையாக இருந்தாலும் பெண்களை முன்னேற விடாமல் தடுக்கும் மோசமான நபர்கள் இந்த உலகத்தில் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள் அவர்களைப் பார்த்து பயப்படாமல் துணிந்து முன்னேற வேண்டும் என பெண்களுக்கு பல அறிவுரைகளை கூறியுள்ளார் அணு இம்மானுவேல் சமீபகாலமாக சினிமா நடிகைகளும் சீரியல் நடிகைகளும் தங்களுக்குள் நடந்த கசப்பான அனுபவங்களை பற்றி பகிர்ந்து வருகிறார்கள் அந்த வகையில் அணு இமானுவேல் இவ்வாறு கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.