தளபதி விஜய் மாஸ்டர், பீஸ்ட் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் கை கோர்த்தது தனது 66 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை மிக பிரமாண்டமான பொருள் செலவில் எடுக்க தில் ராஜூ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் சூட்டிங் சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு சிறப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது விஜய் 66 படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு திட்டவட்டமாக கூறியுள்ளது. இந்த படத்தில் விஜயுடன் இணைந்து நிறைய டாப் ஜாம்பவான்கள் நடிக்கின்றனர்.
இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தமிழ்நாட்டையும் தாண்டி மற்ற மொழிகளிலும் அதிகரித்து உள்ளது இந்த படத்தில் விஜய்க்கு அண்ணன் – தம்பி கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் சரத்குமார் ஷாம் போன்றவர்கள் நடிக்கின்றனர். மற்ற ஜாம்பவான்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
காமெடியனாக யோகி பாபு ஹீரோயின்னாக ராஷ்மிகா மந்தனானாவும் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் 66 படத்தில் நிறைய பாடல்கள் இடம் பெற்றுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது இந்த படத்திற்கு ஷோபி கோரியோகிராபி செய்கிறார். இருந்தாலும் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு பிரபுதேவா கோரியோகிராபி செய்ய இருக்கிறாராம்.

பிரபுதேவா இந்த படத்தில் இணைவதற்கு முக்கிய காரணம் தளபதி விஜய் என கூறப்படுகிறது விஜய் தான் பிரபுதேவா இந்த படத்தில் ஒரு பாடலுக்கு கோரியோகிராபி பண்ண வேண்டும் என கேட்டுக் கொண்டதற்கிணங்க படப்போகும் ஒத்துக்கொண்ட தான் பிரபுதேவாவும் இந்த படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் இதற்கு முன்பாக போக்கிரி, வில்லு ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.