அபிஷேக்கை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை மிரட்ட வரும் மற்றொரு நாயகன்.! யார் அது தெரியுமா.? வைரல் செய்தி.

0
bigboss
bigboss

தமிழில் மிகவும் பிரபலமான நம்பர்-1 நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது நான்கு சீசன்களை கடந்து ஐந்தாவது சீசன் அமோக வரவேற்பைப் பெற்று சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்த நிகழ்ச்சியை 18 போட்டியாளர்களுடன் தொடங்கி ஆறு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் தற்பொழுது 12 போட்டியாளர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

பொதுவாக இதற்கு முன் நடந்த சீசன்களில் நிகழ்ச்சி தொடங்கி 4 5  வாரங்களில் வைல்டு கார்டு என்ட்ரி யாக சில பிரபலங்கள் வருகை புரிவார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 5  தொடங்கி கிட்டத்தட்ட 50 நாட்கள் முடிவடைய உள்ள  நிலையில் வீட்டில் இருந்து இரண்டாவது நபராக வெளியேறிய அபிஷேக் ராஜா கண்டெண்டிருக்காக மீண்டும் தற்போது வீட்டில் நுழைந்து உள்ளார்.

மற்ற போட்டியாளர்கள் யாரும் எதிர்பார்க்காத நிலையில் செம்ம ஷாக் கொடுத்து அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் உள்ளாக்கினார். மேலும் இந்த வீட்டில் இவரது நெருங்கிய நண்பரான பிரியங்கா அபிஷேக் வந்ததை  நினைத்து கண்ணீர் மல்க கட்டி அணைத்தார்.

தற்போது பிக்பாஸ் வீட்டில் அபிஷேக்கை தொடர்ந்து இரண்டாவது வைல்டு கார்டு என்ட்ரி ஆக ஏடிஎஸ் டான்ஸ் அகாடமி பிரபலம் அமீர் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை புரிவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது இன்னும் சரிவர தெரியவில்லை.

இது போல் சமீபத்தில் கூட சின்னத்திரை நாயகன் மற்றும் விஜயின் நெருங்கிய நண்பனான சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக வர உள்ளதாகவும் கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் இந்த செய்தி பரவி வந்த வண்ணமே இருக்கின்றன.