நயன்தாராவை விட சம்பள விஷயத்தில் ஒரு படி மேலே போக வேண்டும் தளபதி 65 பட நடிகை போட்ட வேற லெவல் பிளான்.!

0

தமிழ் திரையுலகில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனது முகத்தை பதிய வைத்த நடிகை தான் பூஜா ஹெக்டே இவர் தமிழில் முகமூடி திரைப்படத்தில் நடித்து அதன் பின்பு சரியான பட வாய்ப்பு எதுவும் கிடைக்காத நிலையில் தெலுங்கு திரையுலகிற்கு சென்று விட்டார்.

அங்கே இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமான நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார் மேலும் இவர் தற்பொழுது தமிழில் தளபதி நடித்து வரும் 65 படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் இவர் தளபதி 65 திரைப்படத்தை தொடர்ந்து மேலும் ஒரு சில திரைப்படங்களை கையில் வைத்துள்ளாராம்.

ஆம் இவர் தளபதி 65 திரைப்படத்திற்காக தனது சம்பளத்தை உயர்த்தி கொண்டுள்ளதாக ஒரு தகவல் இணையதளத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது பூஜா ஹெக்டே படத்தில் நடிப்பதற்காக 5 கோடி வரை சம்பளம் படக்குழுவினர்களிடம் கேட்டு வருகிறாராம்.

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் நயன்தாராவிற்கு சமமாக நீங்க சம்பளம் வாங்க போறீங்களா என ஆச்சரியப் பட்டு இந்த தகவலை பார்த்து வருவது மட்டுமல்லாமல் பூஜா ஹெக்டேவுக்கு எடுத்தவுடன் எப்படி இவ்வளவு சம்பளம் தர போறீங்க என பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

pooja
pooja

அதுமட்டுமல்லாமல் ஒரு சில சினிமா பிரபலங்கள் இவருக்கு இவ்வளவு சம்பளமா என பொறாமையில் பல விமர்சனங்களை வெளியிடுவதாகவும் தகவல் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.