“பிகில்” படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த வேற லெவல் சம்பவம்.! போட்டோஷூட்டில் விஜயை தோற்கடிக்கும் ஏ ஆர் ரகுமான்.

0
a-r-rahman
a-r-rahman

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வெற்றியை நோக்கி ஓடி கொண்டிருப்பவர் தளபதி விஜய் இவர் அண்மை காலமாக தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சுமார் 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி வருகின்றன.

இதனால் நடிகர் விஜய் மார்க்கெட் உயர்ந்த வண்ணமே இருக்கிறது தற்போது கூட தனது 66வது திரைப்படத்திற்காக தெலுங்கு இயக்குனர் வச்சியுடன் கைகோர்க்கிறார் இதனால் விஜய்யின் மார்க்கெட் தமிழை தாண்டி  தாண்டி தெலுங்கிலும் தற்போது அசுர வளர்ச்சியை காண ரெடியாக இருக்கிறதாம்.

இப்படி இருக்கின்ற நிலையில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான பிகில் திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் 200 கோடிக்கு மேல் அள்ளியதாக தகவல்கள் வெளிவருகின்றன இந்த திரைப்படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

இந்த திரைப்படத்தில் அவருடன் கைகோர்த்து நயன்தாரா, யோகி பாபு, டேனியல் பாலாஜி மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து அசத்தினார்.  இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். படத்தின் பின்னணி மியூசிக் மற்றும் பாடல்கள் அனைத்தும் வேற லெவலில் ஹிட்டடித்தது.

அதிலும் குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கப் பெண்ணே பாடல் வேற லெவலில் இருந்தது.அண்மையில் ஏ ஆர் ரகுமான் பிறந்த நாளை திரை உலக பிரபலங்கள் கொண்டாடினர் அதுமட்டுமல்லாமல் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

அந்த வகையில் இயக்குனர் அட்லீ ஏ ஆர் ரகுமான் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் அவர் அதில் அட்லி விஜய் ஆகியவர்கள் ஓரத்திலும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் நடுவில் சும்மா ஹீரோ போல ஜொலிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

bigil
bigil