தளபதி விஜய் தொடர்ந்து ரசிகர்களை கவறும்படியான படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக நெல்சன் உடன் இணைந்து பீஸ்ட் என்னும் படத்தை கொடுத்திருந்தார். இந்த படம் ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி கதைகளம் இல்லாததால் சுமாரான வரவேற்பை பெற்றது.
இருந்தாலும் பீஸ்ட் படம் வசூலில் எந்த பிரச்சனையும் இல்லாமல் அதிக அளவு நடத்தியது இந்த நிலையில் தற்போது வம்சியுடன் இணைந்து வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தை பிரமாண்ட பொருட்செலவில் தில் ராஜு தயாரித்து வருகிறார்.
படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது விசாகப்பட்டினத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் லீக் ஆகின. வாரிசு படத்தில் விஜயுடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, பிரபு, குஷ்பூ, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், சங்கீதா, ஜெயசுதா போன்ற பல நடிகர் நடிகைகளும் நடித்து வருகின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து அடுத்த ஆண்டு ஆரம்பத்திலேயே பொங்கல் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாரிசு படத்தில் இருந்து பல அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. அதன்படி தற்போது இந்த படத்தில் நடித்து வரும் மற்றொரு முக்கிய பிரபலம் குறித்து தகவல் வெளிவந்துள்ளது.
அதன்படி இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜயுடன் இணைந்து நந்தினி ராய் என்னும் நடிகை நடித்து வருகிறாராம். நடிகை நந்தினி ராய் முதலில் பாலிவுட்டில் அறிமுகமாகி அதன்பின் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது தமிழிலும் விஜயுடன் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.