வட சென்னை படப்பிடிப்பில் பலரும் பார்த்திராத தனுஷின் வேற முகம்.! இணையத்தை அலறவிடும் வீடியோ இதோ.!

இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் வெளியான பல திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்திருக்கும் பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் தனுஷை வைத்து இயக்கி தமிழ் சினிமாவில் கால்பதித்த இயக்குனர் தான் வெற்றிமாறன் இந்த பொல்லாதவன் கூட்டணி ஆடுகளம்,வடசென்னை,அசுரன் போன்ற பல திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருக்கும்.

அந்த வகையில் பார்த்தால் பல ரசிகர்களும் தனுஷின் வட சென்னை 2 திரைப்படம் எப்பொழுது என கேட்டு வந்த நிலையில் இந்த கேள்வியை நடிகர் தனுஷ் ஒரு மேடையில் வெற்றிமாறனைப் பார்த்து கேட்டிருப்பார். அப்பொழுது எடுத்த வீடியோ கூட சமீபத்தில் வைரலாகி வந்ததை நாம் பார்த்து இருக்கலாம். அதைத் தொடர்ந்து தற்பொழுது வட சென்னை திரைப்படத்தின் படப்பிடிப்பு வீடியோ ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி  வருகிறது.

ஆம் நடிகர் தனுஷ் படப்பிடிப்பு தளத்தில் வேலை பார்த்து வந்த நபர்களுக்கு தனது கையால் சாப்பாட்டை பரிமாறிய பொழுது எடுத்த வீடியோ போல் தெரிகிறது. மேலும் இந்த வீடியோவில் இதற்கு பின்னணி இசை போட்டு தனுஷின் ரசிகர்கள் தற்பொழுது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

என்னதான் இவர் ஹீரோவாக இருந்தாலும் படப்பிடிப்பு தளத்தில் சக நபர்களுக்கு மரியாதை கொடுத்து அவர்களிடம் ஜாலியாக பேசும் குணம் உடையவர் தனுஷ் இதனை தொடர்ந்து பார்த்தால் நடிகர் தனுஷ் நடிப்பில் தற்பொழுது நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது. அடுத்ததாக இவரது நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் என்றே கூறலாம்.கூடிய சீக்கிரம் வட சென்னை இரண்டாம் பாகம் கண்டிப்பாக எடுக்கும் நிலைமையில் தான் வெற்றிமாறன் பிளான் போட்டு வைத்துள்ளாராம் எனவும் இந்த தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி  வருகிறது.

Leave a Comment

Exit mobile version