அசுரன் படத்தில் “மாரியம்மா” கதாபாத்திரத்தில் முதன்முதலில் நடிக்க இருந்தது – வேறு நடிகை தானாம்.! யார் அது தெரியுமா.?

0
asuran
asuran

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்கள் படங்கள் எப்போதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும். அந்த வகையில் நடிகர்  தனுஷின் அசுரன் திரைப்படம்  ஒரு வழியாக பல்வேறு தடைகளை தாண்டி படம் வெளியாகியது.

இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கி இருந்தார் தனுஷ் வயதான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். படம் எதிர்பார்த்த அளவிற்கு விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் அடுத்து என்ன நடக்கும் என எதிர்பார்க்காத அளவிற்கு கதை சூப்பராக நகர்ந்து இருந்தால் ரசிகர்களையும் தாண்டி மக்களும் இந்த திரைப்படம் வெகுவாக கவர்ந்து இழுத்தது.

இந்த திரைப்படத்தில் தனுஷுடன் கைகோர்த்து பசுபதி, மஞ்சு வாரியர், கென் கருணாஸ், பிரகாஷ் ராஜ், அம்மு அபிராமி, சுப்பிரமணியம் சிவா, ஆடுகளம் நரேன் என மிகப்பெரிய ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்து இருந்தது.இந்தப் படம் எப்படி சூப்பர் ஹிட் அடித்தது அது போல இந்த படத்தில் நடித்தவர்கள் மிகப் பெரிய அளவில் பிரபலம் அடைந்தனர்.

இந்த படத்தில் முதலில் நடிக்க வைக்க படக்குழு ஒரு சில நடிகர் நடிகைகளை தேர்வு செய்தது சில காரணங்களால் அந்த நடிகர், நடிகைகள் மிஸ் செய்துள்ளனர் அந்த வகையில் இந்த படத்தில் அம்மு அபிராமி நடித்த மாரியம்மா கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது.

நடிகை வேறு தானாம். அவர் வேறு யாருமல்ல பிரபல நடிகை சாய் பல்லவி தான் . கடைசி நேரத்தில் சில காரணங்களால் அவர் இந்த படத்தை கைவிடவே பின் தனுசுக்கு ஜோடியாக மாரியம்மா கதாபாத்திரத்தில்  அம்மு அபிராமி  நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.